EVM : இவிஎம் இயந்திர அறையில் மீண்டும் ஆப் ஆன சிசிடிவி.!! ஈரோட்டில் அரசியல் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் 3 அடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு தொகுதியில் இரண்டாவது முறையாக சிசிடிவி செயலிழந்ததுள்ளது. . 

Erode Constituency CCTV malfunctioning in polling machine room KAK

3 அடுக்கு பாதுகாப்பில் இவிஎம் இயந்திரம்

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டத்தில் தேர்தல் முடிவடைந்துள்ளது.  ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் அந்தந்த தொகுதியில் உள்ள கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குகளை மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.  மேலும் சிசிடிவி கேமராக்களும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

 அரசியல் கட்சி நிர்வாகிகளும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் நீலகிரி தொகுதியில் உள்ள வாக்கு பதிவு இயந்திரம் உள்ள அறையில் திடீரென அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயலிழந்தது. இதனை அடுத்து அடுத்த ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் சிசிடிவி சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டது.

Erode Constituency CCTV malfunctioning in polling machine room KAK

வெயில் காரணமாக ஆப் ஆன சிசிடிவி

அதிக வெயிலின் காரணமாகவும், தொடர்ந்து சிசிடிவி இயங்கி வருவதாலும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த ஒரு சில தினங்களில்  ஈரோட்டில் உள்ள வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாக்கப்பட்ட வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி கேமரா நள்ளிரவு நேரத்தில் ஆப் ஆனது. இந்த கேமராவானது மீண்டும் சரி செய்யப்பட்டு செயல்பாட்டை தொடங்கியது.  இதன் காரணமாக அரசியல் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஈரோடு தொகுதியில் உள்ள வாக்கு பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமரா ஆஃப் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Erode Constituency CCTV malfunctioning in polling machine room KAK

மீண்டும் ரிப்பேர் ஆன சிசிடிவி

ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இதில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி இயங்கவில்லை. காலை 8 மணி முதல் சிசிடிவி இயங்காத நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து சரி செய்யும் பணி நடைபெற்றது. சிசிடிவி கேமராக்களை வேட்பாளர்கள், பூத் ஏஜென்டுகள் கண்காணிக்கும் அறையில் பழுது ஏற்பட்டு சர்வர் இயங்கவில்லையென கூறப்பட்டது. இதனையடுத்து பழுது பார்க்கும் பணி நிறைவடைந்து மீண்டும் சிசிடிவி கேரமா செயல்பட தொடங்கியுள்ளது. 

E PASS : ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்.! சுற்றுலா பயணிகள், வணிகர்கள் பாதிப்பு.? பரிசீலனை தேவை- ஜவாஹிருல்லா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios