- Home
- Gallery
- இசைஞானிக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... தோல்வியில் முடிந்த இளையராஜாவின் ஒரு தலைக்காதல்!
இசைஞானிக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... தோல்வியில் முடிந்த இளையராஜாவின் ஒரு தலைக்காதல்!
இசைஞானி இளையராஜா உருகி உருகி காதலித்த பெண் அவருக்கு நோ சொன்னது ஏன் என்பது குறித்த பிளாஷ்பேக் ஸ்டோரியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா. இவரது பாடல்களை முனுமுனுக்காத ஆளே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு இளசுகள் முதல் பெருசுகள் வரை இளையராஜாவின் இசைக்கு அடிமையானவர்கள் ஏராளம். அன்னக்கிளியில் தொடங்கிய ராஜாவின் திரைப்பயணம், 40 ஆண்டுகளைக் கடந்து இன்று விடுதலை 2 வரை வெற்றிநடை போட்டு வருகிறது. தற்போது 80 வயதை எட்டிவிட்ட நிலையிலும் இசை மீதான தீராத காதலால், இன்றளவும் ஓய்வின்றி உழைத்து வருகிறார் இசைஞானி.
இளையராஜாவைப் போல் அவரது வாரிசுகளும் கோலிவுட்டில் இசையமைப்பாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதேபோல் அண்மையில் மரணமடைந்த அவரின் மகள் பவதாரிணியும் பல்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் இளைய மகனான யுவன் சங்கர் ராஜா தனது ஆத்மார்த்தமான இசையாலும் பாடல்களாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.
இளையராஜாவின் மனைவி பெயர் ஜீவா. இவர் கடந்த 2011-ம் ஆண்டே மரணமடைந்துவிட்டார். ஜீவாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னர் வீணா காயத்ரி என்பவரை ஒன் சைடாக காதலித்துள்ளார் இளையராஜா. அந்த லவ் ஸ்டோரி பற்றி தற்போது பார்க்கலாம். கடந்த 1970-ம் ஆண்டு வீணா காயத்ரியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் இளையராஜா. வீணை வாசிப்பதில் ஸ்பெஷலிஸ்டாக இருந்த காயத்ரியை பாராட்டி அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வீணாவுக்கு இசைத் துறையில் முக்கிய பொறுப்பையும் வழங்கி இருந்தாராம்.
இதையும் படியுங்கள்... கனத்த இதயத்துடன் அன்பு மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா - கலங்க வைக்கும் புகைப்படம்
வீணாவை ஒரு தலையாக காதலித்து வந்த இசைஞானி, ஒருகட்டத்தில் அந்த பெண்ணிடமே சென்று தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லி புரபோஸ் செய்துள்ளார். ஆனால் இளையராஜாவின் காதலை ஏற்க மறுத்த வீணா காயத்ரி அவருக்கு நோ சொல்லிவிட்டாராம். இருந்தாலும் மனம்தளராத இளையராஜா அந்தப் பெண்ணின் மீதான காதலை கைவிட முடியாமல் அவரையே உருகி உருகி காதலித்து வந்துள்ளார். ஆனால் இறுதிவரை தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்த வீணா காயத்ரி, தன் சமூகத்தை சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டாராம்.
தன்னுடைய ஒருதலைக் காதல், தோல்வியில் முடிந்ததை நினைத்து துவண்டு விடாமல் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறார். அந்த காதல் தோல்விக்கு பின் சினிமாவில் இசையமைக்க தொடங்கிய இசைஞானி, இன்று பல்வேறு காதல் ஜோடிகளை தன்னுடைய காதல் பாடல்களால் இணைத்து வருகிறார். எக்கச்சக்கமான காதல் பாடல்களை கொடுத்த இளையராஜாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு வலிகள் நிறைந்த ஒரு தலைக் காதலும் ஒளிந்து கிடக்கிறது.
இதையும் படியுங்கள்... 'மயில் போல பொண்ணு ஒன்னு' பவதாரிணியின் தேசிய விருது பாடல் பாடி இறுதி சடங்கு செய்த இளையராஜா குடும்பத்தினர்!