கல்யாணமாகி குழந்தை பிறந்ததும் அந்த ஹீரோ என்ன Auntyனு கூப்பிட்டார்- விஜய்யின் ரீல் காதலி; நடிகை சங்கீதா ஆதங்கம்
விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதா தன்னுடைய சினிமா பயணம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.
sangeetha, vijay
சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடிப்பதில்லை. சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடிக்கும் நடிகைகளே மிகவும் கம்மி தான். சில நடிகைகள் குறுகில காலம் மட்டுமே படங்களில் நடித்தாலும் அவர்களின் நடிப்பு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கும். அப்படி ஒரு நடிகை தான் சங்கீதா. இவர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பேமஸ் ஆனார்.
poove unakkaga sangeetha
அப்படத்துக்கு பின் 4, 5 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடித்த அவர், பின்னர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். தற்போது 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ள சங்கீதா, தன்னுடைய சினிமா பயணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நடிகர் விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் நடித்த பின்னர், அவர்கள் இருவரைப்பற்றி பரவிய காதல் வதந்தி குறித்து பேசி இருக்கிறார் சங்கீதா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress sangeetha
நடிகை சங்கீதா, பூவே உனக்காக படத்தில் கேமராமேனாக இருந்த சரவணன் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் காதல் திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியானதும் அவர் விஜய்யை தான் கல்யாணம் செய்துகொள்ள உள்ளதாக பேச்சு அடிபட்டுள்ளது. ஏனெனில் அந்த சமயத்தில் நடிகர் விஜய், அவருடைய மனைவியான சங்கீதாவை காதலித்து வந்துள்ளார். இருவரின் பெயரும் ஒன்றாக இருந்ததால் விஜய் நடிகை சங்கீதாவை காதலிப்பதாக வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியதாம். ஆனால் விஜய்க்கு தான் சரவணனை காதலிப்பது ஏற்கனவே தெரியும் என்பதால் அவரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சங்கீதா கூறி உள்ளார்.
Sangita Madhavan Nair
நடிகை சங்கீதாவுக்கு தற்போது 20 வயதில் மகள் ஒருவர் இருக்கிறாராம். அவரது மகளுடன் படிக்கும் பெண்கள் தன்னை ஆண்ட்டி என கூப்பிடுவது கஷ்டமாக இல்லை என கூறிய சங்கீதா, தன்னை ஒரு ஹீரோ ஆண்ட்டி என கூறியது பற்றி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், நடிகர் ஒருவர் தன்னை ஆண்ட்டி என கூப்பிட்டதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பேசி உள்ளார். ஆனால் அந்த ஹீரோ யார் என அவர் கூறவில்லை.
இதையும் படியுங்கள்... லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு... கடைசி நேரத்தில் நீதிமன்றம் வைத்த புது டுவிஸ்ட்