லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு... கடைசி நேரத்தில் நீதிமன்றம் வைத்த புது டுவிஸ்ட்

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பாளர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Leo movie FDFS 4AM show permission case high court will hear the plea tomorrow morning gan

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். லியோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 தினங்களே உள்ளதால், அப்படத்தின் டிக்கெட் முன்பதிவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

லியோ திரைப்படத்திற்கு ஒரு நாளைக்கு 5 ஷோ திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள அரசு, அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி வழங்கவில்லை. மற்ற மாநிலங்களில் லியோ திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிட தயாரானாலும், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே அப்படத்தின் முதல் காட்சி வெளியிடப்பட உள்ள சூழல் நிலவி வந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Leo movie FDFS 4AM show permission case high court will hear the plea tomorrow morning gan

இந்த நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி தர மறுத்ததால் அப்படத்தில் தயாரிப்பு தரப்பு தற்போது நீதிமன்றத்தை நாடி உள்ளது. லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி லியோ பட தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறி நீதிபதி அனிதா சுமந்த் இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்பது நாளை காலை தெரிந்துவிடும்.

இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்கும் லியோ... ப்ரீ புக்கிங்கில் மட்டும் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios