வாகை சூடு விஜய்! தளபதியின் அரசியல் வருகை குறித்து... பெருமிதத்தோடு அவரின் அம்மா ஷோபா பகிர்ந்த தகவல்!
தளபதியின் அரசியல் என்ட்ரி, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய்யின் அம்மா ஷோபா தன்னுடைய மகனின் அரசியல் என்ட்ரி குறித்து பகிர்ந்து கொண்டுள்ள தகவல் இதோ...
Vijay
தளபதி விஜய் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அவ்வப்போது அரசியல் குறித்து ஆடியோ லான்ச்சில் பேசி வந்தாலும், கடந்த ஒரு வருடமாக தன்னுடைய தொண்டர்கள் மூலமாக தீவிர அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். எனவே கடந்த ஆண்டே, விஜய்யின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று விஜய் சார்பில் புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் 'தமிழக மக்கள் கழகம்' என்கிற பெயரை பதிவு செய்தார்.
மேலும் தளபதி விஜய் சார்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. 'தமிழக மக்கள் கழகம்' என்று, பெயர் வெளியானது முதலே... ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தளபதி விஜய்க்கு தெரிவித்து வரும் நிலையில், விஜயின் கட்சி ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
விஜய்க்கு எத்தனையோ பேர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், அவரின் தாயாரின் வாழ்த்து என்பது மிகவும் சிறப்பான ஒன்று. தன்னுடைய மகனின் திரைப்பட வெற்றியை பார்த்து பல முறை பூரித்து போன ஷோபா தற்போது முதல் முறையாக... அரசியல் பிரவேசம் குறித்து பிரபல தனியார் கொலைகாட்சியில் பகிர்ந்து கொண்டுள்ளதை பற்றி பார்க்கலாம்.
விஜய் பற்றி எத்தனையோ கேள்விகளுக்கு நான் பதில் கூறி இருக்கிறேன். இன்று அவரது அரசியல் வருகை பற்றி ஒரு அம்மாவாக மட்டுமில்லாமல் சமூக பொறுப்புள்ள பெண்ணாகவும் பதில் சொல்ல வேண்டிய என் கடமை என நினைக்கிறேன். அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல மாட்டேன். காரணாம் ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் இங்கே அரசியல் பொறுப்பு உள்ளது. அத்தனை குடி மக்களின் அபிமானம் பெற்ற விஜய் மாதிரியான ஆளுமை உள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டியது மிகவும் அவசியம்.
புயலுக்கு பின் அமைதி என்று சொல்வார்கள். அதே போல் விஜய்யின் அமைதிக்கு பின் அரசியல் புரட்சி நிச்சயம் இருக்கும். என்னுடைய மகனுக்கு ஓட்டு போகிற ஒரு அம்மாவாக எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் உள்ளது. தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும். முக்கியமாக விஜய்க்கு மதம், சாதி என்பதில் விருப்பம் கிடையாது. அவர் தனக்கு பின்னாடி இருக்கிற எல்லோரையும் வாழ்க்கையில் முன்னாடி வர வைக்க வேண்டும் என்று நினைப்பவர். தற்போது அவருடைய ரசிகர்கள் தொண்டர்களாக மாறி உள்ளார்கள். கூடிய சீக்கிரம் தலைவர்களாகவும் அவர்கள் மாறப் போகிறார்கள். விஜய்க்கு பர்சனலாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் விஜய் உனக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை, வாழ்த்துக்கள், வெற்றி வாகை சூடு என தெரிவித்துள்ளார்.