MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Indraja Engagement: ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா - கார்த்திக் ஜோடிக்கு அமோகமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!

Indraja Engagement: ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா - கார்த்திக் ஜோடிக்கு அமோகமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!

காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கும், அவருடைய மாமா கார்த்திக்கிற்கும் இன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 02 2024, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

விஜயகாந்தின் தர்மச்சக்கரம், படையப்பா போன்ற படங்களில் கூட்டத்தோடு கூடமாக வந்து சென்றவர்... ரோபோ ஷங்கர். இவரின் காமெடி திறமையை வெளிப்படுத்தும், பாலமாக அமைந்த நிகழ்ச்சி தான் 'அசத்த போவது யாரு'. இந்த நிகழ்ச்சி மூலம் குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே கவர்ந்த ரோபோ ஷங்கர், விஜய் டிவிக்கு தாவி, 'கலக்க போவது யாரு' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மெமிக்கிரி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து பலரை சிரிக்க வைத்ததால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
 

26

விஜய் டிவி நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர் கலந்து கொள்ள துவங்கிய பின்னர், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. குறிப்பாக ஏய், தீபாவளி, இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கப்பல் போன்ற படங்களில்... சிறு காமெடி ரோலில் நடித்திருந்தாலும், இவர் வந்த காட்சிகள் ரசிகர்களால்  கவனிக்கப்பட்டன. நடிகர் தனுஷுடன் 'மாரி' படத்தில் படம் முழுவதும் இவர் இடம்பெற்ற காட்சிகள் வந்தது . இந்த படத்திற்கு பின்னர் தன்னுடைய சினிமா கேரியரில் படு பிஸியானார்.

ரஜினி - கமலை விட விஜய் எவ்வளவோ மேல்! ஆனால் இது யாருக்கு எதிரான அரசியல்? ப்ளூ சட்டை போட்ட நச் பதிவு!

36

தற்போது தமிழ் சினிமாவில் நோட்டபிள் காமெடிய நடிகராக இருக்கும் ரோபோ ஷங்கர்... ஏற்றிவிட்ட ஏணியை மறக்க கூடாது என்கிற பழமொழிக்கு ஏற்ப, அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
 

46

இவரை தொடர்ந்து இவரின் மனைவி ப்ரியங்கா, இந்திரஜா ஆகியோரும்... சில படங்களில் நடித்துள்ளதோடு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கும், அவருடைய தாய் மாமா கார்த்திக் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த தகவலை அவரின் குடும்பத்தினரும் உறுதி செய்தனர்.

TVK Vijay: அட்ராசக்க!! அரசியல் கட்சி துவங்கியதும்.. எக்ஸ் தளத்தில் கட்சி பெயரில் அக்கவுன்ட் துவங்கிய விஜய்!

56

இந்நிலையில், இந்திரஜாவுக்கும் - கார்த்திக்கிற்கும் இன்று அவர்களின் இல்லத்திலேயே மிகவும் எளிமையான முறையில் அமோகமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் இருவீட்டு தரப்பில் இருந்தும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

66

தற்போது இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இவர்கள் இருவரின் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Captain Miller OTT Release: வசூலில் மிரட்டிய தனுஷின் 'கேப்டன் மில்லர்' OTT ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved