விஜய் ஆண்டனியின் ரத்தம் முதல் திரிஷாவின் ரோட் வரை! இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் அரை டஜன் படங்களின் லிஸ்ட்
தமிழ் சினிமாவில் வருகிற அக்டோபர் 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் அரை டஜன் தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Theatre release tamil movies on october 6
வாரந்தோறும் வெள்ளிகிழமை புதுப்படங்கள் ரிலீசாவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் ஷாருக்கானின் ஜவான், சமந்தா நடித்த குஷி, விஷாலின் மார்க் ஆண்டனி, ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள முதல் வாரமே அரை டஜன் தமிழ் படங்கள் ரிலீசுக்காக ரெடியாக இருக்கின்றன. அதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்.
ரத்தம்
தமிழ் படம் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் சி.எஸ்.அமுதன். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ரத்தம். இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் மஹிமா நம்பியார், நந்திதா ஆகியோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 6-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தி ரோட்
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் தான் தி ரோட். அருண் வசீகரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படமும் இந்த வாரம் திரைகாண உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இறுகப்பற்று
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் யுவராஜ் தயாளன். இவர் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 6-ந் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் இறுகப்பற்று. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாநகர ஸ்ரீ, வித்தார்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
800
எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஊருவாகி உள்ள திரைப்படம் தான் 800. இப்படத்தில் முத்தையா முரளிதரனாக மாதூர் மிட்டல் நடித்துள்ளார். இப்படமும் வருகிற அக்டோபர் 6-ந் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
மார்கழி திங்கள் மற்றும் ஷாட் பூர் த்ரீ
பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் மார்கழி திங்கள் படமும், அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, சினேகா, டெல்லி கணேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஷாட் பூர் த்ரீ படமும் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... வனிதா பொண்ணுன்னா சும்மாவா? சைலண்டா ஜோவிகா செய்த காரியம்.. இதனால் தான் கமல் அப்படி சொன்னாரா?