அப்பா திவாலனாலும்.. ரூ.2000 கோடி சொத்து மதிப்புடன் ஆடம்பர வாழ்க்கை வாழும் மகன்..
ஜெய் அன்மோல் அம்பானி, அனில் அம்பானியின் மூத்த மகன் ஆவார். அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 966227 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடு ஆண்டிலியாவில் வசிக்கின்றனர்.
தங்கள் வணிக ஒப்பந்தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் அம்பானி குடும்பம் அடிக்கடி செய்திகளில் இருக்கும். முகேஷ் அம்பானியின் குடும்பம் கவனத்தில் இருக்கும் போது, அவரது சகோதரர் அனில் அம்பானி ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறார்.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அனில் அம்பானியின் மகன் மற்றும் மருமகனைப் பற்றி அறிய நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர். ஜெய் அன்மோல் அம்பானி, அனில் அம்பானியின் மூத்த மகன் ஆவார்.
அனில் அம்பானி ஒரு காலத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்தார். அவரின் சொத்து மதிப்பு ரூ.1.81 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் அவரின் வணிக சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்ததால், அவர் திவாலானதாக அறிவித்தார்.
எனினும் அவரின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர் லம்போர்கினி கல்லார்டோ மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் போன்ற சில பிரபலமான விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கிறார். பிரைவேட் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஜெட் விமானங்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது, அதை அவர் வணிக பயணத்திற்காக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஜெய் அன்மோலின் சொத்து மதிப்பு ரூ. 2000 கோடி என்று கூறப்படுகிறது.
Jai Anmol Ambani
அன்மோல் அம்பானி மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார்., பின்னர் இங்கிலாந்தில் உள்ள செவன் ஓக்ஸ் பள்ளியில் சேர்ந்தார். இங்கிலாந்தில் உள்ள உள்ள வார்விக் வணிகப் பள்ளியில் பதிவு பட்டப்படிப்பை படித்தார்.
Jai Anmol Ambani
அன்மோல் அம்பானி மிக இளம் வயதிலேயே குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். அவரது தந்தை குழுமத்தின் பல துணை நிறுவனங்களுக்கு தலைமை தாங்கினார், ஆனால் அம்பானி குறிப்பாக ரிலையன்ஸ் கேபிட்டலில் தீவிரமாக இருந்தார். அன்மோல் 2016 இல் ரிலையன்ஸ் கேபிட்டல் குழுவில் கூடுதல் இயக்குநராக சேர்ந்தார்.
தனது நவீன நிர்வாகத் திறன் மற்றும் குடும்ப வணிகத்தில் புதிய முன்னோக்கு ஆகியவற்றால் அடிக்கடி பாராட்டப்படுகிறார். அவரும் அவரது சகோதரர் ஜெய் அன்ஷுல் அம்பானியும் அக்டோபர் 2019 இல் ரிலையன்ஸ் இன்ஃப்ரா இயக்குநர்கள் குழுவில் நியமிக்கப்பட்டனர், இருப்பினும் அவர்கள் ஒரு வருடம் கழித்து ராஜினாமா செய்தனர்.