First Night-ல் சரக்கா... மிருணாளினி உடன் முரட்டு ரொமான்ஸில் விஜய் ஆண்டனி - கவனம் ஈர்க்கும் ரோமியோ
விஜய் ஆண்டனி ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி. இவர் நான் என்கிற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் முழு நேர நடிகராக உருவெடுத்த அவர் அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன், சலீம், கொலைகாரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
குறிப்பாக சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அப்படத்தை தன் சொந்த தயாரிப்பில் தயாரித்ததோடு, அதில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
இதையும் படியுங்கள்... Hitler Teaser: ஆக்ஷன் கதையில்... விஜய் ஆண்டனி மிரட்டியுள்ள 'ஹிட்லர்' பட டீசர் வெளியானது!
விஜய் ஆண்டனி பெரும்பாலும் திரில்லர் படங்களையே தேர்வு செய்து நடித்து வந்த நிலையில், தற்போது அவரை முதன்முதலாக ரொமான்ஸ் மோடுக்கு அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். விஜய் ஆண்டனி முதன்முறையாக ரொமாண்டிக் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் ரோமியோ. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியதாக அறிவித்திருந்த படக்குழு, தற்போது அப்படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த போஸ்டரில் முதலிரவு அறையில் விஜய் ஆண்டனி பால் சொம்புடனும், மிருணாளினி விஸ்கி உடனும் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் இது முரட்டு ரொமான்ஸ் என குறிப்பிட்டுள்ள படக்குழு இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... வடக்குப்பட்டி ராமசாமி முதல் டெவில் வரை... பிப்ரவரி 2ந் தேதி தியேட்டரில் ரிலீசாகும் நச்சுனு நாலு தமிழ் படங்கள்