கலையுலகை கலக்கிய நடிகை மாதவி.. அழகில் அம்மாவை மிஞ்சும் மூன்று மகள்கள் - லேட்டஸ்ட் ஃபேமிலி போட்டோஸ் இதோ!
Actress Madhavi Daughters : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை தான் மாதவி.
Actress Madhavi
கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கலை உலகில் களமிறங்கிய நாயகி தான் மாதவி. தமிழில் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான "புதிய தோரணங்கள்" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
Madhavi Marriage
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "தில்லுமுல்லு" மற்றும் கமலஹாசன் நடிப்பில் வெளியான "ராஜபார்வை" உள்ளிட்ட திரைப்படங்களில் மாதவியின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Actress Madhavi Daughters
1996 ஆம் ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை மாதவி அதன் பிறகு தனது திரையுலக வாழ்க்கைக்கு குட் பை சொல்லிவிட்டு பிரபல தொழிலதிபரான சர்மா என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
Madhavi Daughters
Evelyn Sharma, Priscilla Sharma மற்றும் Tiffany Sharma என்று மாதவிக்கு இப்பொழுது மூன்று மகள்கள் உள்ளனர். தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடும் மாதவி, பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.