காதல் திருமணம்.. ராதிகாவுடன் திருப்பதி சென்ற கேப்டன்..? அவரின் இமேஜை காப்பாற்ற போராடிய நண்பர் - என்ன நடந்தது?
Radhika and Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பல படங்களில் அவருக்கு நாயகியாக நடித்தவர் மூத்த தமிழ் நடிகை ராதிகா என்பது அனைவரும் அறிந்ததே.
Radha
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழ் துறையில் உச்ச நாயகனாக இருந்த பொழுது வெளியான திரைப்படங்கள் தான் நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், நல்லவன், தர்ம தேவதை, சிறைப்பறவை மற்றும் பூந்தோட்ட காவல்காரன் ஆகிய படங்கள். இவை அனைத்த்திலுமே நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு நாயகி, ராதிகா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
Vijayakanth Movie
அப்போது ஏற்கனவே நடிகர் பிரதாப்போத்தனை விவாகரத்து செய்திருந்தார் ராதிகா சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் காதலித்து வந்த சூழ்நிலையில், அவர்களுக்கு திருமணம் நடக்கவிருந்ததாகவும், அதற்காக அவர்கள் திருப்பதிக்கு செல்லவிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் அப்பொழுது இந்த திருமணத்தை தடுத்து விஜயகாந்தை பிரேமலதாவிற்கு திருமணம் செய்து வைத்ததில் மிகப்பெரிய பங்கு இப்ராஹிம் ராவுத்தர் அவர்களுக்கு உண்டு.
Ibrahim
தமிழ் திரை உலகில் மிகப்பெரிய தயாரிப்பாளராக விளங்கி வந்த ராவுத்தர், நடிகர் விஜயகாந்தின் மிக மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நண்பர் விஜயகாந்த் அவர்களுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய அக்கரையை கொண்டிருந்த ராவுத்தர் அவர்கள், ஏற்கனவே விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்வதால் தன் நண்பனின் ஹீரோ இமேஜிற்கு ஆபத்து வந்துவிடும் என்று அவரிடமே கூறி அவர்கள் இருவருடைய திருமணத்தை தடுத்துள்ளார்.
நண்பரின் கட்டளையை மீற முடியாத விஜயகாந்த் அவர்களும் ராதிகாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது நின்றுள்ளார். அப்பொழுதுதான் விஜயகாந்த் அவர்களுடைய ரசிகையான பிரேமலதாவின் அறிமுகம் கிடைத்து. அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. விஜயகாந்த் அவர்கள் மிகப்பெரிய கொடைவள்ளல் என்பதை தாண்டி, தன் உற்ற நண்பர்களின் சொல்லும் அடிபணியும் ஒரு சிறந்த மனிதராகவும் திகழ்ந்துள்ளார்.