மன்னிப்பு கேட்ட மன்சூர்; மாட்டிக்கொண்ட சீனு ராமசாமி! தர்மதுரை இயக்குனர் மீது தாறுமாறாக குவியும் பாலியல் புகார்
திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதால் மன்சூர் அலிகான் பஞ்சாயத்து ஓய்ந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.
seenu ramasamy, Mansoor Ali Khan
தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த திரிஷா - மன்சூர் அலிகான் விவகாரம் தான். திரிஷா குறித்து மன்சூர் அலிகான் கொச்சையாக பேசியது பெரும் விவாதப் பொருளாக மாறி, அவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணைக்கு நேற்று ஆஜரானபோது கூட திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். ஆனால் இன்று காலை திடீரென மன்னிப்பு கடிதம் வெளியிட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மன்சூர் அலிகான்.
Bismi
மன்சூர் அலிகான் பஞ்சாயத்து ஓய்ந்த நிலையில், அடுத்ததாக பாலியல் புகாரில் சிக்கி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இடம் பொருள் ஏவல் என்கிற படத்தை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கியபோது, அதில் ஹீரோயினாக முதலில் நடித்துவந்த நடிகை மனிஷா யாதவ்விற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் நடிகை மனிஷா யாதவ் அப்படத்தில் இருந்தே விலகிவிட்டதாகவும், இதை அந்த நடிகை தன்னிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டதாகவும் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறி இருந்தார்.
seenu ramasamy
அவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த இந்த பேட்டி வைரலானதை அடுத்து, இயக்குனர் சீனு ராமசாமி “அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அந்த நடிகை ஏன் எனக்கு நன்றி சொல்கிறார்” என கேள்வி எழுப்பி மனிஷா யாதவ், ஒரு குப்பை கதை பட ஆடியோ லாஞ்சில் தனக்கு நன்றி சொன்ன வீடியோவை பதிவிட்டு விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
seenu ramasamy, manisha yadav
இதையடுத்து இன்று காலை நடிகை மனிஷா யாதவ், இந்த விவகாரம் குறித்து தன்னுடைய சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டு போட்ட பதிவில், சீனு ராமசாமி தன்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதை குறிப்பிட்டு இருந்தார். இதனால் பிஸ்மி சொன்னது தான் உண்மை என அறிந்த ரசிகர்கள் அவ்ர் சீனு ராமசாமி குறித்து பேசிய வீடியோவை வைரலாக்கினர். இதனிடையே சீனு ராமசாமி கேட்டுக்கொண்டதாக கூறி பிஸ்மி அளித்த பேட்டியை தனியார் யூடியூப் சேனல் நீக்கிவிட்டது.
Bindu Madhavi
இதையடுத்து தன்னுடைய யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிஸ்மி, சீனு ராம்சாமி மனிஷா யாதவ் மட்டுமின்றி மேலும் சில நடிகைகளிடமும் இதுபோன்று சில்மிஷ வேலைகளை செய்துள்ளதாக கூறினார். அதன்படி நீர்ப்பறவை படத்தில் முதலில் பிந்து மாதவி தான் நடிக்க கமிட் ஆனதாகவும், இவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறினார். அதுமட்டுமின்றி மற்றுமொரு நடிகைக்கும் சீனு ராமசாமி தொல்லை கொடுத்ததாகவும் அந்த நடிகைக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதால் அவரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என பிஸ்மி பேசியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... உத்தமன் போல் விளக்கம் கொடுத்த சீனு ராமசாமி... அவர் செய்த சில்மிஷ வேலைகளை சொல்லி டார் டாராக கிழித்த மனிஷா யாதவ்