உத்தமன் போல் விளக்கம் கொடுத்த சீனு ராமசாமி... அவர் செய்த சில்மிஷ வேலைகளை சொல்லி டார் டாராக கிழித்த மனிஷா யாதவ்
இயக்குனர் சீனு ராமசாமி தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில், நடிகை மனிஷா யாதவ் அவரை வெளுத்து வாங்கி இருக்கிறார்.
seenu ramasamy, manisha yadav
தென்மேற்கு பருவக்காற்று என்கிற தேசிய விருது வென்ற படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதையடுத்து தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற மண்மனம் மாறாத கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் இடம் பொருள் ஏவல். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
Bismi
இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். இதுதவிர விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நிதி நெருக்கடியில் சிக்கிய இப்படம் இன்று வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படத்தில் நடிகை நந்திதா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது மனிஷா யாதவ் தான். அவர் சில காரணங்களால் விலகியதை அடுத்து அந்த வாய்ப்பு நந்திதாவுக்கு சென்றது.
இந்த நிலையில், நடிகை மனிஷா யாதவ், எதற்காக இப்படத்தில் இருந்து விலகினார் என்று பிரபல சினிமா பத்திரிகையாளரான பிஸ்மி சமீபத்திய பேட்டியில் பேசி இருந்தார். அதன்படி இயக்குனர் சீனு ராமசாமி, கொடைக்கானலில் இடம் பொருள் ஏவல் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகை மனிஷா யாதவ்வுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரின் டார்ச்சர் தாங்க முடியாததால் தான் மனிஷா யாதவ் அப்படத்தில் இருந்து விலகியதாகவும் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
seenu ramasamy
இதையடுத்து சீனு ராமசாமி இதற்கு மறுப்பு தெரிவித்து போட்ட பதிவில், “இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க. இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்” என குறிப்பிட்டு இருந்தார்.
manisha yadav post
இதைப்பார்த்து சீனு ராமசாமி சொன்னது தான் உண்மை என நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு பதிவை போட்டிருக்கிறார் நடிகை மனிஷா யாதவ். ஒரு குப்பை கதை பட ஆடியோ லாஞ்சில் சீனு ராமசாமி மேடையில் அமர்ந்திருந்ததால் தான் எல்லாருக்கும் சொன்னது போல் அவருக்கும் நன்றி சொன்னேன். எதையும் மாற்ற முடியாது. 9 வருஷத்துக்கு முன்னாடி என்ன சொன்னேனோ அதில் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டவரிடம் நான் ஏன் மீண்டும் பணியாற்ற போகிறேன்” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் சீனு ராமசாமி செய்த சில்மிஷ வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் மனிஷா யாதவ்.
இதையும் படியுங்கள்... ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா... இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?