MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன்? அப்படினா ஓபிஎஸ் மகன்?

நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி.தினகரன்? அப்படினா ஓபிஎஸ் மகன்?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 13 2024, 06:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
parliament election

parliament election

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். மார்கழி மாதம் என்பதால் கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடங்காமல் இருந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்க உள்ளன. 

24
Annamalai

Annamalai

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் பாஜக 3வது அணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. பாஜக தலைமையில் அமைக்கும் கூட்டணியில் டிடிவி.தினகரனின் அமமுக, ஓபிஎஸ், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாவிட்டது. 

இதையும் படிங்க;- தரையை துடைக்க உதவும் மாப் குச்சியில் குளுக்கோஸ் ஸ்டாண்ட்! அரசு மருத்துவமனையில் அவலத்தை அம்பலப்படுத்தும் டிடிவி

34
TTV Dhinakaran

TTV Dhinakaran

மேலும் தேமுதிக மற்றும் பாமக மற்றும் சிறிய கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், தேமுதிக பாஜகவுடன் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள டிடிவி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

44
Ravindhranath

Ravindhranath

ஏற்கனவே இந்த தொகுதியில் எம்.பி.யாக உள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனது சாதி ஒட்டுக்கள் அதிகமாக உள்ள சிவகங்கையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு பாஜகவும் இசைவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
டிடிவி தினகரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved