மொத்தத்தையும் இழந்த உலக நாயகன்.. நிதி நெருக்கடியால் சுருண்டு படுத்த டாப் 3 கோலிவுட் படங்கள் - லிஸ்ட் இதோ!
எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் சரி, சில சமயங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் நிதி நெருக்கடிகள் காரணமாகவும், இன்னும் பிற பிரச்சனைகள் காரணமாகவும் பாதியில் பல திரைப்படங்கள் முடங்கிப் போய் உள்ளது. அந்த வகையில் டாப் நடிகர்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு பாதியில் நின்ற படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
Kettavan
கெட்டவன்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிம்புவே இயக்கி நடித்து வெளியிட இருந்த திரைப்படம் தான் கெட்டவன். இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நமீதா, சந்தானம், தருண் கோபி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த பல போஸ்டர்களும் இன்றளவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல காரணங்களால் இந்த திரைப்படம் மேற்கொண்டு நகராமல் நின்றது குறிப்பிடத்தக்கது.
Yogan
யோகன் அத்தியாயம் ஒன்று
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் இது. ஏ.ஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக இந்த படம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருந்தது.
இருப்பினும் தன்னிடம் ஸ்கிரிப்ட் ரெடியாக இருப்பதாகவும், விஜய் ஓகே சொன்னால் படத்தை எடுக்க தான் தயாராக உள்ளதாகவும் கௌதம் கூறியுள்ளார் விஜய் அவர்களும் இந்த திரைப்படத்தில் இணைய ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.
Marudhanayagam
மருதநாயகம்
கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபத்தை அழைத்து வந்து இந்த படத்திற்கான பூஜை போட்டிருந்தார். மேலும் பிரத்தியேகமாக ஆக்ராவிலிருந்து அறிய வகை கழுகுகள் இந்த திரைப்படத்திற்காக வரவழைக்கப்பட்டு படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டது. மருதநாயகம் படத்திற்காக கிட்டத்தட்ட தனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாரானார் உலக நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட பாதி அளவு படம் முடிந்த நிலையில் நிதி நெருக்கடியின் காரணமாக இந்த திரைப்படம் மேற்கொண்டு நகராமல் இருந்தது. ஆனால் நிச்சயம் இந்த திரைப்படத்தை உருவாக்க கமல் தயாராக இருப்பதாகவும், அதற்கான தயாரிப்பாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் படம் உருவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.