நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி.. அரசே முழு செலவையும் ஏற்கும்.. மாணவர் சின்னதுரையிடம் உறுதியளித்த ஸ்டாலின்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சென்னை சேர்ந்த திருநங்கை மாணவி நிவேதா மற்றும் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை ஆகியோர் உயர்கல்வி படிப்பு செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 
 

Chief Minister Stalin said that the government will bear the entire cost of Nanguneri student Chinnathurai studies KAK

சக மாணவர்களால் தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் சின்னதுரையும், அவரது தங்கையும் வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் படித்துக்கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவரை தாக்கிய அதே பள்ளியை சேர்ந்த  பிளஸ்-2 படித்த மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். 

MK STALIN : திமுக அரசின் 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி.! மக்களுக்கான திட்டங்களில் சாதித்தது என்ன.?

Chief Minister Stalin said that the government will bear the entire cost of Nanguneri student Chinnathurai studies KAK

12ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவன்

இந்தநிலையில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது இதில தேர்வு எழுதிய சக மாணவர்களால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை 469 மதிப்பெண்களை எடுத்திருந்தார்.  இந்தநிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து சின்னதுரை  வாழ்த்து பெற்றனர், இதனையடுத்து கல்வி செலவை செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவன் சின்னத்துரை,  நீங்கள் என்ன ஆசைப்படுகிறீர்களோ அதை படியுங்கள் அதற்கான முழு செலவையும் அரசு ஏற்கும் என கூறியதாக தெரிவித்தார். 

Chief Minister Stalin said that the government will bear the entire cost of Nanguneri student Chinnathurai studies KAK

தாக்கிய மாணவர்களும் நல்லா படிக்கனும்

மேலும் என்னை தாக்கிய மாணவர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என கூறியவர், இது போன்று யாருக்கும் செய்யக்கூடாது என கேட்டுக்கொண்டார். மேலும் அவர்களும் படித்து முன்னேற்றம் அடைய வேண்டும் என சின்னத்துரை தெரிவித்துள்ளார். இதே போல தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவியான நிவேதாவும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கும் படிப்பு செலவை தமிழக அரசு ஏற்கும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். 

நாங்குநேரி: 12ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios