School College Holiday: குட்நியூஸ்.. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு..!
நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
thiruvarur
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 72-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சந்தனக்கூடு விழா நிகழ்ச்சி வரும் 24ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவை காண வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர்.
school leave
இந்நிலையில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நாளை (நவம்பர் 24ம் தேதி) பொதுமக்கள் நலன் கருதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலகங்கள் ஆகியவை குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 02.12.2023 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.