Today Gold Rate in Chennai : தாறுமாறாக அதிகரித்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?
கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வந்த நிலையில் இன்றைய நிலவரம் பற்றி காணலாம்.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனையானது.
ஒரு சவரன் ரூ.44,360-ஆக விற்பனையானது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.5,545ஆகவும், 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,015ஆகவும் விற்பனையானது. இந்நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
இன்றைய (செப்டெம்பர் 04) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000-க்கு விற்கப்படுகிறது.
BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!