இனி Ceiling Fan கிளீன் பண்ண கஷ்டப்பட வேண்டாம்; ரொம்பவே ஈஸி.. டிப்ஸ் இதோ!
சீலிங் ஃபேனை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலையாகும். ஆனால் நிமிடங்களில் அவற்றை சுத்தம் செய்வதற்கான எளிய வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
தற்போது கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் வீட்டில் எல்லாருடைய வீட்டிலும் சீலிங் ஃபேன் அதிக நேரம் பயன்படுத்தப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீலிங் ஃபேன் நீண்ட நேரம் ஓடினால் அது சீக்கிரமாகவே அழுக்காகி விடும்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hvp0jztr0dntp3z9a1s2yzz4/187edee5-56a4-4266-8834-03e94ed0abc0--1-_300x399xt.jpg)
இருந்தபோதிலும், பலர் சீலிங் ஃபேன்களை சுத்தம் செய்வது கடினமான காரியம் என்பதால் புறக்கணிக்கின்றனர். ஆனால், சில எளிய முறைகள் மூலம் சீலிங் ஃபேனை நிமிடங்களில் சுத்தம் செய்யலாம்.
டஸ்ட் கிளீனர்: இவற்றைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு முன் முதலில் ஒரு துணியைக் கொண்டு சீலிங் பேனை நன்கு துடைக்க வேண்டும். பிறகு டஸ்ட் கிளீனர் மூலம் சுத்தம் செய்தால், ஃபேன் பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா: இந்த வழியில் ஃபேனை சுத்தம் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் பாத்திரம் கழுவும் சோப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை நன்கு கலந்து, பின் அவற்றைக் கொண்டு ஃபேனில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்கை நீங்கள் எளிதாகக் சுத்தம் செய்யுங்கள்.
இதையும் படிங்க: ஏசி இல்லாமலேயே அறையை குளுகுளுவென்று மாற்றலாம்! இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
துணி: சீலிங் ஃபேனில் இருக்கும் தூசியை முதலில் நல்ல ஈரமான துணியை கொண்டு சுத்தம் செய்யுங்கள். பிற்கு ஈரம் இல்லாத ஒரு துணியை கொண்டு சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்தால் ஃபேனில் இருக்கும் தூசியை சுலபமாக அகற்றலாம்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் சம்மர் வந்தாச்சு.. Fan & AC ஒரே நேரத்தில் பயன்படுத்தலாமா? அப்படி பண்ணா என்ன ஆகும் தெரியுமா?
நீங்கள் உங்கள் வீட்டு சீலிங் ஃபேனை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்து வந்தால் மட்டுமே அதில் அதிக தூசி தங்காது. இப்படி செய்தால், பேனை சுத்தம் செய்வது உங்களுக்கு எளிதாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D