பிக்பாஸ் எலிமினேஷனில் நடந்த செம்ம ட்விஸ்ட்..! யாரும் எதிர்பாராத போட்டியாளர் இந்த வாரம் எவிக்ட் ஆனார்?
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், யாரும் சற்றும் எதிர்பாராத போட்டியாளர் வெளியேற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BB Tamil 7
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் எவிக்ஷன் இல்லை என பிக்பாஸ் அறிவித்த நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகளுடன் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த வாரம் நிக்சன், அக்சயா, மணி, விசித்ரா, ஐஷு, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம், பிரதீப் ஆகிய 11 போட்டியாளர்கள் நாமினேசன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்களில் இதுவரை எந்த ஒரு தரமான கண்டென்ட்டும் கொடுக்காமல்... ஏனோ தானோ என விளையாடி வரும் வினுஷா, அக்சயா, மற்றும் , ஓவராக சகுனி வேலை செய்து சண்டை மூட்டி விடும் மாயா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என கூறப்பட்டது.
மேலும் நெட்டிசன்கள் கணிப்பு படி, வினுஷா தான் இந்த முறை வெளியேற அதிகம் வாய்ப்புள்ளதாகவும் கருதப்பட்டது. ஆனால் இந்த மூன்று போட்டியாளர்களுமே, சேவ் செய்யப்பட்டு... யாரும் எதிர் பாராதா போட்டியாளர் தான் வெளியேறுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அந்த வகையில், போட்டியாளர்களிடம் பல முறை தன்னுடைய உடல் பலத்தை காட்டி மூர்க்கமாக தாக்கிய விஜய் வர்மா, வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. ஆரம்பத்தில் இவருக்கு அதிக அளவில் வாக்குகள் கிடைத்தாலும், கடைசி நாட்களில் மக்களின் வாக்குகள் குறைய துவங்கியதால்... விஜய் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.