Sangeeta Net Worth: விஜய் பெயரில் இருக்கும் சொத்தை விட... அவர் மனைவி சங்கீதா தான் பல கோடிக்கு அதிபதியா?
தளபதி விஜயின் மனைவி மிகவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் என்பது அனைவரும் அறிந்தது தான், இவர் மேல் மட்டும் பல கோடி சொத்துக்கள் உள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
Thalapathy vijay
தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். குறிப்பாக இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'லியோ' படத்திற்கு 120 கோடி சம்பளமாக பெற்றுள்ள நிலையில், 68 படத்திற்கு 150 கோடி சம்பளமாக பெருகிறாராம். ஒவ்வொரு படத்திற்கும் இப்படி தாறுமாறாக சம்பளத்தை ஏற்றிக்கொண்டே செல்லும் தளபதி, இதனை பல்வேறு வகையில் முதலீடும் செய்து வருகிறார்.
Vijay Inverse Business:
நடிகைகள் தொழிலில் இன்வெர்ஸ் செய்தால், அது பற்றிய தகவல்கள் வெளிப்படையாக அதிகம் பேசப்பட்டாலும், ரஜினி, அஜித், விஜய் போன்ற பிரபலங்கள் சில லாபகரமான தொழில்களில் முதலீடு செய்தால் அவை அதிகம் பேசப்படுவது இல்லை என்பதே நிதர்சனம்.
Vijay Ready to Enter Political:
அதே போல் தளபதி விரைவில் அரசியலிலும் கால் பாதிக்க தயாராகியுள்ளார். இதற்க்கு பிள்ளையார் சுழி போடும் விதத்தில், சமீபத்தில் இவர் செய்த செயல்கள் அதிகம் கவனிக்கப்பட்டது. அதாவது, விஜய் மக்கள் இயக்கத்தினர் மூலம் பெரியார், காமராஜர், அம்பேதகர் போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தது. பசி தினத்தில் அணைத்து மாவட்டங்களிலும் மத்திய உணவு, மற்றும் 10 மற்றும் 12-ஆம் ஆண்டு பொது தேர்வில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
vijay, sangeetha
தளபதி ஒரு பக்கம் அரசியலில் தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில், இவரின் விவாகரத்து பற்றிய சர்ச்சையும் அவ்வபோது எழுகிறது. 'லியோ' படத்தில் தளபதி த்ரிஷாவுடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளதால்... பலர் மீண்டும் சங்கீதா - விஜய் திருமண உறவு குறித்து பேசி வருகிறார்கள். தளபதி தரப்பில் இருந்தும் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படாமல் உள்ளது.
மீண்டும் இடையழகை காட்டிய ரம்யா பாண்டியன்! பாவாடை - ஜாக்கெட் மட்டும் அணிந்து தாவணி போடாமல் ஹாட் போஸ்!
vijay sageeta love
இந்த விவகாரம் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்... தற்போது தளபதி விஜயின் மனைவி சங்கீதாவுக்கு சொந்தமாக உள்ள, சொத்துக்கள் குறித்த விவரங்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்த, தமிழ் பெண் ஆவார். இவரின் தந்தை சொர்ணலிங்கம் ஒரு தொழிலதிபர். மருத்துவரான சங்கீதா, தளபதியின் தீவிர ரசிகை என்பதால் அவ்வப்போது இந்தியா வரும் போதெல்லாம் விஜயை வந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
Sangeetha Stay in London:
ஒரு கட்டத்தில் இவர்களின் நட்பு காதலாக மாறியது. பின்னர் இரு வீட்டு தரப்பிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. தற்போது சங்கீதா விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லண்டனில் இருப்பதாக சில செய்திகள் வெளியானாலும், மற்றொரு தரப்பினர் மகளின் படிப்புக்காக சங்கீதா லண்டனில் அவரின் அப்பா வீட்டில் உள்ளதாக கூறுகிறார்கள்.
Sangeeta net worth
விஜய்யின் சொத்துக்கள் இல்லாமல், சங்கீதாவின் பெயரில் மட்டும் சுமார் 400 கோடி மேல் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யும் தான் வாங்கிய பல சொத்துக்களை சங்கீதா மேல் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விஜய் மேல் இருக்கும் சொத்துக்களை விட அவரின் மனைவி மீது தான் அதிகமான சொத்துக்கள் உள்ளதாம். அதே போல் சங்கீதாவின் தந்தையும் இவர் பெயரில் லண்டனில் பல கோடிக்கு சொத்து வாங்கி வைத்துள்ளாராம். ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D