MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மாரிமுத்து மரணத்தால் 'ஏதிர்நீச்சல்' சீரியலில் ஏற்பட்ட மாற்றம்! அடுத்த ஆதி குணசேகரன் இந்த வெள்ளித்திரை பிரபலமா?

மாரிமுத்து மரணத்தால் 'ஏதிர்நீச்சல்' சீரியலில் ஏற்பட்ட மாற்றம்! அடுத்த ஆதி குணசேகரன் இந்த வெள்ளித்திரை பிரபலமா?

எதிர்நீச்சல் தொடரின் ஆணி வேராக பார்க்கப்படும், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் கசிய துவங்கியுள்ளது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 09 2023, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

TRP-யை மைய புள்ளியாக வைத்து, பல சீரியல்களுக்கு இடையே ரேஸ் நடந்து வந்தாலும், ஒவ்வொரு வாரமும், முதல் அல்லது இரண்டாவது இடத்தை தட்டி தூக்கி வருகிறது 'எதிர்நீச்சல்' தொடர். திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் சன் டிவியில் தினம் தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சமீபத்தில் தான் 500 எபிசோடுகளை எட்டியது. இதனை சீரியல் குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

24

இந்த கொண்டாட்டம் முடிந்து ஒரு வாரமே ஆகும் நிலையில், மாரிமுத்துவின் மரண செய்தி சீரியல் குழுவினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. மாரிமுத்து, குணசேகரன் கேரக்டரில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தினாலும் இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் இவர் பெரிதாக அலட்டி கொண்டு நடிக்காமல் முக பாவனையிலேயே ஸ்கோர் செய்து விடுவார்.

ஏற்கனவே இரண்டு முறை அட்டாக்..! 'மாரிமுத்து' செய்த மிகப்பெரிய தவறு இது தான்.. மருத்துவர் பகீர் பேட்டி!

34

குறிப்பாக, 'ஏய் இந்த மா' போன்ற வசனங்கள், மற்றும் டைமிங் காமெடி போன்றவை இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என கூறலாம். இயக்குனர் திருச்செல்லாம் கூட நேற்று மருத்துவமனையில் மாரிமுத்துவின் இழப்பு குறித்து பேசியபோது, "எதிர்நீச்சல் சீரியலுக்கு இது மிகப்பெரிய இழப்பு என்றும் எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் குணசேகரன் கதாபாத்திரம் என கூறி இருந்தார்".

44

இப்படி ஒரு மிகப்பெரிய ஆளுமையை இந்த சீரியல் குழு இழந்திருந்தாலும், அடுத்தடுத்து இந்த தொடரை... தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டிய பொறுப்பு, இயக்குனர் திருச்செல்வத்திற்க்கு உள்ளது. இந்நிலையில், இந்த சீரியலில் அடுத்த குணசேகரனாக நடிக்க உள்ள வெள்ளித்திரை நடிகர் பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் கசிய துவங்கியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மாரிமுத்து நடித்து வந்த, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Jawan Day 2 Box Office: ஜெயிலர் வசூலை ஜெட் வேகத்தில் ஓரம்கட்டிய 'ஜவான்'! ஆல் ஏரியாவிலும் கிங் நிரூபித்த ஷாருக்
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved