பிறப்புறுப்பில் பட்ட கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஸ்டிரைட் டிரைவ்!
மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஷௌர்யா புவுலிங் செய்தார். அவர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் நேராக ஸ்டிரைட் டிரைவ் செய்ய, பந்து வேகமாகத் திரும்பி வந்து ஷௌர்யாவின் அந்தரங்க பகுதிகளில் தாக்கிவிட்டது. வலியில் துடித்த சிறுவன் ஷௌர்யா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துவிட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள லோஹேகான் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
உயிரிழந்த சிறுவன் ஷௌர்யா என்ற ஷம்பு காளிதாஸ் காண்ட்வே கோடை விடுமுறையில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது நடந்த இந்த விபரீத நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஷௌர்யா புவுலிங் செய்தார். அவர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் நேராக ஸ்டிரைட் டிரைவ் செய்ய, பந்து வேகமாகத் திரும்பி வந்து ஷௌர்யாவின் அந்தரங்க பகுதிகளில் தாக்கிவிட்டது. வலியில் துடித்த சிறுவன் ஷௌர்யா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துவிட்டார்.
3 பக்கெட் பிளான் என்றால் என்ன? அதிக பென்ஷன் கிடைக்க இந்த ஐடியாவை யூஸ் பண்ணிக்கோங்க!
பந்து தாக்கியதும் அவர் மயங்கி விழுந்ததைக் கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து நின்றனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பெரியவர்கள் விரைவாக வந்து அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளளனர்.
மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சௌர்யாவுக்கு ஏற்பட்ட காயம் மோசமாக இருந்ததால், மருத்துவமனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக புனே விமான நிலைய காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. பதின் பருவத்தைக் கடக்காத சிறுவன் சௌரியாவின் இழப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மாப்பிள்ளை வீட்டாருக்கு இலையில் இனிப்பு வைக்கவில்லை என்பதால் நின்றுபோன திருமணம்!