ஏற்கனவே இரண்டு முறை அட்டாக்..! 'மாரிமுத்து' செய்த மிகப்பெரிய தவறு இது தான்.. மருத்துவர் பகீர் பேட்டி!
ஏற்கனவே நடிகர் மாரிமுத்துவுக்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்துள்ளதாக, மாரிமுத்துவுக்கு சிகிச்சையளித்து மருத்துவர் கூறியுள்ளதோடு, அவர் செய்த மிகப்பெரிய தவறு இது தான் என சுட்டிக்காட்டி உள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
Actors Marimuthu and RS Shivaji
கடந்த வாரம் விஜய் டிவியில், சிரித்து பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ் சிவாஜி மற்றும் மாரிமுத்து ஆகிய இரண்டு மாபெரும் கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரன் நடித்து மிரட்டி வந்த மாரிமுத்துவின் இழப்பு, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
Marimuthu Acting Jailer and Indian 2
திரை உலகில் துணை இயக்குனராக காலடி எடுத்து வைத்து, இயக்குனர், நடிகர் என தன்னுடைய பன்முக திறமையால்... ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு தன்னுடைய 50 வயதுக்கு மேல் தான் உயர்வை கண்டார் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலால் இவருக்கு வெள்ளித்திரையில் மதிப்பு கூடியது, ரஜினியுடன் ஜெயிலர், கமலுடன் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வந்தார். எனவே இவ்வளவு சீக்கிரம் அவர் இந்த உலகை விட்டு செல்வார் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த கொடூர சம்பவம் நேற்று நடந்தது.
Ethirneechal Dubbing Work:
சென்னை வடபழனி, குமரன் காலனியில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் 'எதிர்நீச்சல்' சீரியலுக்கான டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மாரிமுத்துவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவருடைய முகத்தில் வேர்வை அதிகமாக கொட்டியதால், சந்தேகப்பட்டு நடிகர் கமலேஷ் என்ன ஆனது? என கேட்டபோது கூட உண்மையை மறைத்துவிட்டு, நெஞ்சு வலியோடு, தானாகவே காரை ஓட்டிக்கொண்டு அருகே இருக்கும் சூர்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்க்கு முன்பாகவே அவரின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
Unconscious in Hospital Parking
மருத்துவமனையின் பார்கிங்கிலேயே மயங்கி விழுந்த, அவரை மீட்டு மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரிடம் காட்டி உள்ளனர். மேலும் கார் ஓட்டி கொண்டிருக்கும் போதே, தன்னுடைய மனைவிக்கு போன் செய்து தனக்கு ஏதோ செய்வது போல் இருக்கிறது எனக் கூறி, காவேரி மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து அரை கிலோ மீட்டர் காரை ஓட்டி வருவதற்குள் அவரை நிலை மோசமாகி வாயில் நுரை தள்ளி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவங்கள் எல்லாம் ஐந்தே நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டதாக கூறியுள்ளார் நடிகர் கமலேஷ்.
Doctor Shocking Report
மேலும் இவரை பரிசோதித்த மருத்துவர், மாரிமுத்துவின் நிலை குறித்தும் அவருடைய பழைய மெடிக்கல் ரெக்கார்டை பார்த்து கூறியுள்ள தகவல் பகீர் கிளப்பி உள்ளது. ஏற்கனவே மாரிமுத்துவுக்கு இரண்டு முறை அட்டாக் வந்திருப்பதாகவும், ரத்தக்குழாயில் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக்ஸ் செய்திருப்பதாகவும், சர்க்கரை வியாதியும் உள்ளதால் அதற்காகவும் அவர் மாத்திரை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Already had Two Heart Attacks
ஏற்கனவே இரண்டு முறை அட்டாக் வந்தவர்கள் பொதுவாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மன அழுத்தத்திற்கு செல்லாத வகையில் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் செய்த மிகப்பெரிய தவறு, நெஞ்சு வலி இருக்கிறது என்பதை அறிந்த பின்னர்... அவரே காரை ஓட்டி வந்தது தான். ஒரு வேலை அவர் உதவியாளரையோ அல்லது பக்கத்தில் இருப்பவர்களையோ உதவிக்கு அழைத்து இருந்தால், அவரை ஓரளவு காப்பாற்றி இருக்க முடியும் என கூறியுள்ளார். மருத்துவரின் இந்த பேட்டி தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!