Leo First Review: லியோவில் அளவுக்கு அதிகமான வன்முறை மற்றும் கொடூர காட்சிகள்! வெளியானது முதல் விமர்சனம்!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'லியோ' திரைப்படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இப்படம் குறித்து, அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அதன் X பக்கத்தில் படம் குறித்த தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

Leo First Review:
தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ படத்தை UK-வில் விநியோகம் செய்துள்ள, அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான், லியோ படம் குறித்த, காட்சிகளை விவரிக்கும் விதமாக முதல் விமர்சனத்தை தன்னுடைய X பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
BBFC 18+ Category :
இதுகுறித்து அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "LEO திரைப்படத்தில், அதிக அளவிலான வன்முறை மற்றும் கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட, 'லியோ' படத்தில் அதிக அளவிலான கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ளதை பார்க்க முடிகிறது. LEO படத்தை 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம், என்கிற இலக்கை நாம் கொண்டிருந்தாலும், BBFC அதற்கு 18+ வழங்கியுள்ளது. அதாவது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் இப்படத்தை பார்க்க முடியும் என கூறியது. துரதிர்ஷ்டவசமாக 15-17 வயதுக்குட்பட்ட இளம் ரசிகர்களால் இப்படத்தை பார்க்க முடியாத நிலை இருந்ததாக அஹிம்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Leo Movie Scene Cut:
BBFC உடனான விவாதங்களுக்குப் பிறகு, 'லியோ' படத்தை 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் பார்க்க வேண்டும் என முடிவு செய்து பேச்சு வார்த்தை நடத்தினோம். அதாவது (சில வன்முறை மற்றும் கொடூரமான பின்விளைவுகளின், அல்ட்ரா குளோஸ்-அப் காட்சிகளை மென்மையாக்குதல்) , மற்றும் படத்தின் மையக்கரு, ஓட்டம், தனித்துவமான தருணங்கள் மற்றும் தளபதியின் வெகுஜன ஈர்ப்பு ஆகியவற்றில் எந்த விளைவுகளையும் இப்படம் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்தோம்.
Not Allowed With in 14 Years Kids:
ஆனால் 4 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பலர் தளபதி விஜயின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும், சில கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அவர்களால் இப்படத்தை பார்க்க முடியாது. முக்கிய அதிரடி காட்சிகள் காட்சிகளை முழுவதுமாக அகற்றினால் - அது திரைப்படத்தின் அசல் பதிப்பை மிகவும் வித்தியாசமாக மாற்றும், அது சரியான தீர்வாகவும் இருக்காது, இந்த படத்திற்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வர எதிர்பார்த்த அனைத்து பெற்றோர்களிடமும், நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். "LEO" திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படம் - தீவிரமான மற்றும் வன்முறை நிறைந்த படமாக உள்ளது. எனவே 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leo First Review:
மற்றொரு பதிவில் 2நிமிடங்கள் கிராஃபிக் க்ளோஸ் - அப் காட்சிகளின் கோரமான காட்சிகள் டிரிம் செய்யப்படும். சினிமாக்களில், இந்த மாற்றங்கள் கவனிக்கப்படாமல் இருக்கும் மற்றும் ஓட்டம், முக்கிய கதை அல்லது வெகுஜன தருணங்களை பாதிக்காது. இந்த காட்சிகள் படத்தின் வன்முறையில் 1%க்கும் குறைவாகவே உள்ளன என்பதையும் தன்னுடைய முதல் விமர்சனமாக அஹிம்சா நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D