Ponni: விஜய் டிவியின் 'பொன்னி' சீரியலில் இருந்து... திடீர் என விலகிய நடிகை! இனி அவருக்கு பதில் இவர்தான்!
விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பொன்னி தொடரில் நடித்து வரும் இளம் நடிகை விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
Ponni Serial:
வித்தியாசமான கதைக்களம் கொண்ட, சீரியல்களை ஒளிபரப்புவதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும், பொன்னி தொடர்... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
Ponni Serial Casting:
இதில் வைஷு சுந்தர் கதாநாயகியாக நடிக்க, சபரி நாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில், வருண் உதய், கார்த்திக் சசிதரன், ஸ்ரீதேவி அசோக், யுவன்ராஜ் நேத்ரன், ஷமிதா, பார்கவி ஈஸ்வரமூர்த்தி மற்றும் தர்ஷிகா போன்ற பலர் நடித்து வருகின்றனர்.
Ponni Marriage is Stoped:
இந்த சீரியல் பெங்காலி தொடரான காட்சோரா என்கிறசீரியலின் ரீமேக்காக 'பொன்னி' பெயரில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கிறது. தன்னுடைய தந்தைக்காக, விருப்பமே இல்லாத திருமணத்திற்கு பொன்னி சம்மதிக்கும் நிலையில், அந்த திருமணம் அவர் தந்தை இறந்து விடுவதால் தடைபடுகிறது. பின்னர் பொன்னி தன்னுடைய தந்தையின் பாலிய சிநேகிதன் வீட்டில் தஞ்சம் புகுகிறார்.
Ponni Struggle in life:
ஒரு வேலைக்காரியாக அங்கு இருக்கும் பொன்னி எப்படி.. ஹீரோவை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத ஹீரோ மற்றும் அவரின் அம்மா ஆகியோர் பொன்னியை ஏற்று கொள்வார்களா? கஷ்டங்களை மட்டுமே வாழ்க்கையில் கண்ட பொன்னி சந்தோஷமாக சக்தியுடன் வாழ்வாரா? என்பதை நோக்கி இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
சமந்தாவுக்கு நயன்தாரா அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்..! என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
Shiyara sharmi Leave this serial:
இதில் பொன்னியை வாழ விட கூடாது என்று நினைக்கும் ஒரு கும்பலும் அந்த வீட்டில் உள்ளது. பொன்னி வாழ்க்கையை கெடுக்க நினைப்பவர்களில் முக்கியமானவர், வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷியரா ஷர்மி. இவர் ஹீரோயின் மாமன் மகளாக நடித்து வருகிறார்.
New Vennila Replaced Jue:
இவர் தான் 'பொன்னி' சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு பதில் Jue என்பவர் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D