- Home
- Gallery
- பாரதிராஜாவின் இந்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் அனிதா விஜயகுமார் நடிக்க வேண்டியதா? நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே!
பாரதிராஜாவின் இந்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் அனிதா விஜயகுமார் நடிக்க வேண்டியதா? நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே!
பாரதிராஜா தன்னை ஹீரோயினாக்க ஆசைப்பட்டதாகவும், அவர் சான்ஸ் கொடுத்தும் அவரின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் அனிதா விஜயகுமார் கூறி உள்ளார்.

Vijayakumar Family
நடிகர் விஜயகுமாருக்கு மொத்தம் 5 மகள்கள், இதில் நான்கு பேர் சினிமாவில் நடித்துவிட்டனர். ஆனால் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தவர் தான் அனிதா விஜயகுமார். மருத்துவம் படித்த இவர் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. அனிதா விஜயகுமார் மட்டுமல்ல அவரது கணவர், மகள், மகன் என அவர்கள் குடும்பத்தில் அனைவருமே மருத்துவர்கள் தான். அனிதா விஜயகுமார் சினிமாவில் நடிக்காவிட்டாலும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் லட்சக்கணக்கில் ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார்.
Anitha Vijayakumar
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தனக்கு கிடைத்த பட வாய்ப்பு பற்றி மனம்திறந்து பேசியுள்ளார் அனிதா விஜயகுமார். அதன்படி அவரை சினிமாவில் நடிக்க வைக்க பாரதிராஜா தான் தீவிரம் காட்டினாராம். அவர் இயக்கிய கருத்தம்மா படத்தில் நடிக்க அனிதா விஜயகுமாரை அணுகி இருக்கிறார் பாரதிராஜா. ஆனால் அந்த சமயத்தில் அனிதாவின் அம்மா நோ சொல்லிவிட்டதால் கருத்தம்மா பட வாய்ப்பு அனிதா விஜயகுமார் கைநழுவி போனது.
இதையும் படியுங்கள்... தங்கம், வெள்ளி, வைரம் மட்டும் 66 கிலோ இருக்காம்; வெளிவந்த கங்கனாவின் சொத்து மதிப்பு விவரம் - ஷாக் ஆகாம படிங்க
vijayakumar daughter anitha
அவர் மருத்துவம் படித்தவர் என்பதால் அப்படத்திலும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க தான் பாரதிராஜா அனிதா விஜயகுமாரை அணுகினாராம். அந்த சமயத்தில் அனிதா முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதனால் அவர் படிப்பில் கவனம் செலுத்தட்டும் என அவரது அம்மா சொல்லிவிட்டதால், சினிமாவுக்கு நோ சொல்லி இருக்கிறார் அனிதா. ஒருவேளை அந்த சமயத்தில் சினிமா பக்கம் சென்றிருந்தால் மருத்துவராகி இருப்பேனா என்பது தெரியவில்லை என அனிதா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
Anitha Vijayakumar is the first choice for Karuthamma Movie
அனிதா விஜயகுமார் நடிக்க மறுத்த கேரக்டரில் பின்னர் நடிகை மகேஸ்வரியை நடிக்க வைத்தார் பாரதிராஜா. அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, அதற்கு மூன்று தேசிய விருதுகளும் கிடைத்தது. அதில் இரண்டு விருதுகள் அப்படத்தில் இடம்பெற்ற போராளே பொண்ணுத்தாயி பாடலுக்கு வழங்கப்பட்டது. அப்பாடலை பாடிய சொர்ணலதாவுக்கும் அப்பாடல் வரிகளை எழுதிய வைரமுத்துவுக்கும் விருதுகள் கிடைத்தது. அதுமட்டுமின்றி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் அப்படம் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கறுப்பு பணத்தை வெள்ளை பணமா மாத்துறேனா? சமூக வலைதளத்தில் பரவும் கருத்துக்கு பாலா முற்றுப்புள்ளி