கறுப்பு பணத்தை வெள்ளை பணமா மாத்துறேனா? சமூக வலைதளத்தில் பரவும் கருத்துக்கு பாலா முற்றுப்புள்ளி

கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை. வெயிலில் நின்று நான் கருத்து சம்பாதித்த பணத்தை தான் மக்களுக்காக செலவு செய்கிறேன் என KPY பாலா தெரிவித்துள்ளார்.

i am not changing a black money to white money said kpy bala in theni district vel

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மொழி பேசும் அனைவரிடமும் பிரபலமானவர் நடிகர் பாலா. நடிப்பையும் கடந்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது, வீடற்றவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு என பலதரப்பட்டவர்களுக்கும் தம்மால் முடிந்த உதவிகளை சமூக அக்கறையோடு செய்து வருகிறார். இதனால் இவருக்கு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பும் பெருகி வருகிறது.

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தமிழர்; யார் இந்த ராஜலிங்கம்?

இதனிடையே, ஆண்டிப்பட்டியில் செயல்படும் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலா பங்கேற்றார். நிகழ்ச்சியில் நடிகர் விக்கி சிவாவுடன் இணைந்து  நடிகர் விஜய், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர் கார்த்திக், செந்தில் உள்ளிட்ட புகழ்பெற்ற சினிமா பிரபலங்களின் குரலில் மிமிக்ரி செய்தும், நகைச்சுவை செய்தும் பேசியதோடு, பாடல்களுக்கு நடனமாடி கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களை கைத்தட்ட வைத்து மகிழ்ச்சி படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலா, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதி தனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள மக்களின் அன்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்குமான பொதுவான கருத்து சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. நம்மால் முடிந்ததை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதால் செய்கிறேன். 

Suchitra : வெள்ளி தாம்பூலத்துல கொக்கைன் தருவாங்க... கமலின் பர்த்டே பார்ட்டி பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா

யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நல்லது தான் செய்வார்கள். மற்றவர்களை பற்றி சொல்வதற்கு எனக்கு தகுதி இல்லை. நான் ஒரு சாதாரன மனிதன், நடிகர் விஜய் மிகப்பெரிய ஆள் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நம்மளால் முடிந்தது சம்பாதிப்பது மட்டுமே. ஒரு சிலர் சொல்வதை போல என் பின்னால் யாருமில்லை. என் பின்னால் இருப்பது கஷ்டங்கள்,  வெட்கம், அடி,  வலி ஆகியவை மட்டும் தான். இதற்கடுத்து எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான் என்றும் கூறினார்.

மேலும் ஒரு சிலர் கூறுவது போல கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக நான் மாற்றவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறேன். மூன்று வேளை உணவுக்கு சிரமப்பட்ட எனக்கு உணவு கிடைத்ததால் இந்த எண்ணம் தோன்றியதாகவும் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios