2 முறை ரிஜெக்ட் செய்த ஏகே... அஜித்துக்காக பயங்கரமான கதையோடு காத்திருக்கும் அட்லீ
விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, நடிகர் அஜித்துடன் பணியாற்றுவது பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார்.
Atlee
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். அவரின் பட்டறையில் இருந்து வந்தவர் தான் அட்லீ. எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அவர் இயக்கிய முதல் படமே பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. இதனால் அட்லீ அடுத்ததாக வாய்ப்பளித்தார் விஜய். இருவரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் தெறி.
Atlee, vijay
அட்லீ நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன் என்பதால், தெறி படத்தில் அவரை செம்ம மாஸாக காட்டி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். தெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் செம்ம ஹாப்பியான விஜய், அடுத்தடுத்து அட்லீக்கு மெர்சல், பிகில் என இரண்டு பட வாய்ப்புகளை வழங்கினார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதால் அட்லீ முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இதன்பின்னர் அட்லீக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஜவான்.
vijay, Atlee, shah rukh khan
கோலிவுட்டில் கலக்கி வந்த அட்லீ, ஜவான் படம் மூலம் பாலிவுட்டுக்கு அழைத்து சென்றார் ஷாருக்கான். இப்படத்தையும் தன்னுடைய ஸ்டைலில் பக்கா கமர்ஷியம் படமாக இயக்கி பாலிவுட்டிலும் தன்னுடையை திறமையை நிரூபித்தார் அட்லீ. ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஜவான் படத்தின் வெற்றியால் செம்ம குஷியாக உள்ள அட்லீ, சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Director Atlee Kumar
அந்த பேட்டியில், அஜித்துடன் பணியாற்றுவது பற்றி அவர் பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது : விஜய் அண்ணாவோட படம் பண்ணியாச்சு, அடுத்து அஜித்துடன் எப்போ படம் பண்ணுவனானு நிறைய கேக்குறாங்க. அஜித் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு படம் பண்ணனும்னு ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடியா இருக்கு. முதன்முதலில் என்னை அஜித் சாரிடம் அறிமுகப்படுத்தியது நயன்தாரா தான்.
Atlee about ajith
அஜித் சாரோட அவங்க ஆரம்பம் ஷூட்டிங்ல இருந்தப்போ, நான் ராஜா ராணி படத்துக்கான வேலைகளை செய்துகொண்டிருந்தேன். அப்போ ஈசிஆர்-ல ஷூட்டிங் நடந்தப்போ போனேன். இவர் தான் என்னுடைய இயக்குனர் என நயன் என்னை அஜித்திடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர் என்னைப்பார்த்துவிட்டு, என்ன ஸ்கூல் முடிச்சிட்டீங்களானு கிண்டல் பண்ணினார்.
Atlee, Ajith
கரெக்டா பண்ணிடுங்கனு அட்வைஸ் பண்ணினார். என் அம்மாவை அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு கதை சொல்லனும்னு இரண்டு மூன்று முறை முயற்சி செய்தேன். அது சரியாக அமையவில்லை. அமையும்போது வெடியா தான் இருக்கும்.; கண்டிப்பா அவரோட படம் பண்ணனும்னு ஆசை இருக்கு. அவர் ஓகேனு சொல்லிட்டா படம் பண்ணிரலாம். அவருக்காக என்னிடம் பயங்கரமான ஸ்கிரிப்ட் இருக்கு. நான் ரெடியா இருக்கேன்” என பேசியுள்ளார் அட்லீ.
இதையும் படியுங்கள்... நிக்சனின் லீலைகளை கண்டுகொள்ளாத கமல்... சுட்டிக்காட்டி சுளுக்கெடுத்த நாகார்ஜுனா - மரண மாஸ் வீடியோ இதோ