MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மகனை தொடர்ந்து மகளின் திருமணம்.. தளபதி 68 பட நடிகர் ஜெயராம் வீட்டில் களைகட்டும் கல்யாண சீசன்

மகனை தொடர்ந்து மகளின் திருமணம்.. தளபதி 68 பட நடிகர் ஜெயராம் வீட்டில் களைகட்டும் கல்யாண சீசன்

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸுக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது அவரின் மகள் மாளவிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 09 2023, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
jayaram family

jayaram family

மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஜெயராமுக்கு 1990-களில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. வாயதான பின்னரும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல் தன் வயதிற்கு ஏற்ற வேடங்களை தற்போது ஏற்று நடித்து வருகிறது. ஜெயராமுக்கு பார்வதி என்கிற பெண்ணுடன் கடந்த 1992-ம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு காளிதாஸ் என்கிற மகனும், மாளவிகா என்கிற மகளும் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
kalidas and malavika jayaram

kalidas and malavika jayaram

ஜெயராம் தற்போது நடிகர் விஜய்யின் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெயராமை போல் அவரது மகன் காளிதாஸும் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். நேற்று கூட இவர் நடித்த அவள் பெயர் ரஜினி என்கிற திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ஜெயராமின் மகள் மாளவிகா சினிமா பக்கம் தலைகாட்டாமலே இருந்து வந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
kalidas and malavika jayaram with their fiance

kalidas and malavika jayaram with their fiance

இதனிடையே நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவர் தனது நீண்ட நாள் காதலியான தாரினியை விரைவில் கரம்பிடிக்க உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விரைவில் இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

44
malavika jayaram Engagement

malavika jayaram Engagement

தன் மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்த கையோடு தன் மகள் மாளவிகாவின் நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்துள்ளார் நடிகர் ஜெயராம். மாளவிகாவும், நவ்னீத் கிரீஷ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்துள்ளது. அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தன் இரு பிள்ளைகளுக்கும் அடுத்தடுத்து திருமணம் நிச்சயமாகி உள்ளதால் நடிகர் ஜெயராம் வீட்டில் திருமண சீசன் களைகட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... தம்மாத்தூண்டு தாடியை எடுக்க மறுத்ததால்... மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பட வாய்ப்பை மிஸ் பண்ணிய விக்ரம்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved