MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோடிகளில் புரளும் இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கிறதா?

கோடிகளில் புரளும் இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கிறதா?

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 24 2023, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Prabhu deva

Prabhu deva

பிரபுதேவா என்றதுமே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது நடனம் தான். டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான இவரது ரத்தத்திலேயே டான்ஸ் கலந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் சினிமாவில் தன் நடனத்திறமையை வெளிப்படுத்தி பேமஸ் ஆன பிரபுதேவா பின்னர் படிப்படியாக நடிப்பின் பக்கம் சென்றுவிட்டார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த இந்து என்கிற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

26
Actor Prabhu deva

Actor Prabhu deva

இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உடன் கூட்டணி அமைத்த பிரபுதேவா, அவர் இயக்கிய காதலன் படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற பேட்ட ரேப், முக்காலா, ஊர்வசி போன்ற பாடல்களுக்கு பிரபுதேவா ஆடிய நடனம் வேறலெவலில் ஹிட் ஆகின. அதனால் அவரை ரசிகர்கள் செல்லமாக இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கத் தொடங்கினர். இதையடுத்து 10 ஆண்டுகள் முன்னணி ஹீரோவாக கொடிகட்டிப் பறந்தார் பிரபுதேவா.

36
Prabhu deva salary

Prabhu deva salary

இதையடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்த பிரபுதேவா, ஆரம்பத்தில் தெலுங்கு படங்களை இயக்கினார். இயக்குனராக பிரபுதேவாவுக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்றால் அது போக்கிரி தான். நடிகர் விஜய் ஹீரோவாக நடித்த இப்படம் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து இந்த காம்போவில் வில்லு என்கிற திரைப்படம் உருவானது. ஆனால் போக்கிரி தந்த மேஜிக் வில்லு படத்தில் மிஸ் ஆனதால் இது தோல்வியை தழுவியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

46
Nayanthara, Prabhu deva

Nayanthara, Prabhu deva

வில்லு படத்தின் தோல்விக்கு பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற பிரபுதேவா. அங்கு சல்மான் கான் நடித்த வாண்டட் படத்தின் மூலம் அறிமுகமானார். அங்கு இவர் இயக்கிய முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் பின்னர் ரவுடி ரத்தோர், ராஜ்குமார், ஆக்‌ஷன் ஜாக்சன், தபாங் 3, ராதே என பாலிவுட்டில் செம்ம பிசியான இயக்குனராக வலம் வந்தார். பின்னர் படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டு, ஹீரோவாக பிரபுதேவா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

56
Prabhu deva first wife

Prabhu deva first wife

தற்போது அரை டஜன் படங்களுடன் செம்ம பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா. இவர் சினிமாவில் சக்சஸ்புல்லாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்துள்ளார். ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரபுதேவாவுக்கு இரண்டு குழந்தைகளும் இருந்தன. இதில் இவரது மகன் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்ததை அடுத்து தன் முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் பிரபுதேவா.

பின்னர் நடிகை நயன்தாரா மீது காதல் வயப்பட்டார் பிரபுதேவா. இருவரும் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சென்றனர். பிரபுதேவாவுக்காக சினிமாவை விட்டு விலகுவதாகவும் நயன்தாரா அறிவித்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் திருமணத்துக்கு முன்னரே பிரிந்துவிட்டனர். இதையடுத்து டாக்டர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபுதேவாவுக்கு அண்மையில் குழந்தையும் பிறந்தது.

66
Prabhu deva net worth

Prabhu deva net worth

சினிமாவில் இயக்குனர், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வரும் பிரபுதேவா, தேவி, போகன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இதுதவிர இவருக்கு சொந்தமாக சிங்கப்பூரில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றும் உள்ளது. இப்படி செம்ம பிசியான பிரபலமாக வலம் வரும் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.140 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் தற்போது விஜய்யுடன் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவாவுக்கு சொந்தமாக சென்னை, மும்பையில் வீடுகளும் உள்ளதாம். இதுதவிர இவரிடம் ஏராளமான சொகுசு கார்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பளார் என அடிவாங்கிய சலார்... சட்டென சரிந்த 2-ம் நாள் வசூல் - அதுக்குன்னு இவ்வளவுதானா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved