MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பாக்ஸ் ஆபிஸில் பளார் என அடிவாங்கிய சலார்... சட்டென சரிந்த 2-ம் நாள் வசூல் - அதுக்குன்னு இவ்வளவுதானா?

பாக்ஸ் ஆபிஸில் பளார் என அடிவாங்கிய சலார்... சட்டென சரிந்த 2-ம் நாள் வசூல் - அதுக்குன்னு இவ்வளவுதானா?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள சலார் திரைப்படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 24 2023, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
salaar

salaar

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் சலார். இப்படத்தை கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸ் உடன் சுருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி, பிருத்விராஜ் சுகுமாரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தையும் கேஜிஎப் பாணியில் ஆக்‌ஷன் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

24
salaar box office

salaar box office

சலார் திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. இப்படம் கடந்த டிசம்பர் 22-ந் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. இப்படம் கேஜிஎப் ரேஞ்சுக்கு இருக்கும் என எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் பில்டப் மட்டுமே இருந்ததாலும் சொதப்பலான திரைக்கதையாலும் சலாருக்கு நெகடிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
salaar collection

salaar collection

இருந்தாலும் முதல் நாளில் இப்படம் இமாலய வசூலை வாரிக்குவித்தது. இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.178 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்மாக அறிவித்தது. இதன்மூலம் இந்த ஆண்டு முதல் நாளில் ரூ.148 கோடி வசூலித்து அதிக கலெக்‌ஷனை அள்ளிய படமாக இருந்த நடிகர் விஜய்யின் லியோ பட சாதனையை சலார் முறியடித்து முதலிடம் பிடித்து உள்ளது. இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

44
salaar day 2 box office

salaar day 2 box office

நெகடிவ் விமர்சனங்கள் அதிகளவில் வந்ததால் சலார் திரைப்படம் இரண்டாம் நாளில் மிகபெரிய சரிவை சந்தித்து உள்ளது. இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.90 கோடி வசூலித்து இருந்த நிலையில், இரண்டாம் நாளில் வெறும் ரூ.55 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாம். அதேபோல் நேற்றைய தினம் இப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. முதல் நாளைக்காட்டிலும் இரண்டாம் நாளில் சரிவை சந்தித்துள்ள சலார் வசூல் இன்று பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கேத்தீஸ்வரன்... போண்டா மணி ஆனது எப்படி? பெயர் மாற்றத்துக்கு பின்னணியில் இப்படி ஒரு சோக கதை இருக்கா...!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved