Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மழை.. வானிலை அலர்ட்..!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Heavy Rain
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, திருவள்ளூர், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.