அம்பானியின் மால் ஓப்பனிங்.. டூபீஸ் உடையில் காதலனுடன் கவர்ச்சி புயலாக வந்திறங்கிய தமன்னாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்
மும்பையில் அம்பானி திறந்துள்ள பிரம்மாண்ட மாலின் திறப்பு விழாவில் நடிகை தமன்னா தனது காதலன் உடன் வந்து கலந்துகொண்டார்.
Tamannaah and vijay varma
அம்பானி என்றாலே ஆடம்பரம் தான் என சொல்லும் அளவுக்கு அவர் எக்கச்சக்கமான தொழில்களை செய்து வருகிறார். அந்த வகையில் அவர் லேட்டஸ்டாக மும்பையில் பிரம்மாண்ட மால் ஒன்றை திறந்துள்ளார். இதன் திறப்பு விழாவில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்துகொண்டுள்ளது.
Tamannaah ramp walk with vijay varma
அம்பானி மும்பையில் ஜியோ வேர்ல்டு டிரைவ் என்கிற பெயரில் உலகத்தரத்தில் கட்டியுள்ள மாலில் டிரைவ் இன் தியேட்டர், உணவு விடுதிகள் என ஏராளமான வசதிகள் உள்ளன. இதன் திறப்பு விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
Tamannaah and vijay varma at jio world plaza
அம்பானியின் ஜியோ வேர்ல்டு டிரைவ் திறப்பு விழாவில் நடிகை தமன்னாவும் தனது காதலன் விஜய் வர்மாவுடன் ஜோடியாக வந்து கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Tamannaah lover vijay varma
தமன்னாவும், விஜய் வர்மாவும் ஜோடியாக ரேம்ப் வாக் செய்தபோது எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் சரியான ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Tamannaah vijay varma romance
விஜய் வர்மா பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் கோர்ட் ஷர்ட் அணிந்து ஸ்டைலாக நடந்து வர, அவருடன் நடிகை தமன்னா டூபீஸ் உடை மேல் கொசுவலையை போர்த்தியது போல் வெள்ளை நிற அல்ட்ரா மாடர்ன் உடையணிந்து வந்திருந்தார்.
Tamannaah vijay varma love
தமன்னாவின் அல்ட்ரா கிளாமர் உடையை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள், அழகு டால் போல் இருப்பதாக அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.
Tamannaah Ramp walk
காதல் புறாக்களாக வலம் வரும் தமன்னா, விஜய் வர்மா ஜோடி அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிகண்ட லியோ இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ