விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிகண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 5 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.
Director Lokesh Kanagaraj
கோவையை அடுத்த கிணத்துக்கடவு என்கிற ஊரை சேர்ந்தவர் தான் லோகேஷ் கனகராஜ். பள்ளிப்படிப்பை பொள்ளாச்சியில் படித்த இவர், கோவையில் கல்லூரி படிப்பை முடித்தார். பேஷன் டெக்னாலஜி படித்த லோகேஷ், ஆரம்பத்தில் வங்கியில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஓய்வு கிடைக்கும் நேரங்களில் குறும்படங்களையும் இயக்கி வந்தார். ஒரு கட்டத்தில் சினிமா தான் தன்னுடைய இலக்கு என்பதை முடிவு செய்த லோகேஷ், வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக சினிமாவுக்காக உழைக்க தொடங்கினார்.
vijay, Lokesh kanagaraj
லோகேஷ் கனகராஜுக்கு கடந்த 2012-ம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது. இவர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். லோகேஷ் சினிமாவுக்காக வேலையை விட்ட சமயத்தில் அவரது மனைவி ஐஸ்வர்யா தான் வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்துக்கொண்டாராம். இந்த ஜோடிக்கு ஆத்விகா, ஆருத்ரா என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
Lokesh Kanagaraj and Ulaga Nayagan
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய களம் என்கிற குறும்படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அதனை தன்னுடைய அவியல் என்கிற ஆந்தாலஜி தொடருடன் இணைத்து வெளியிட்டார். இந்த குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தான் லோகேஷுக்கு மாநகரம் பட வாய்ப்பு கிடைத்தது. முதல் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட லோகேஷ், அதில் தான் கற்றுக்கொண்ட ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கி வெற்றிகண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
lokesh kanagaraj, Rajinikanth
மாநகரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்கிய கைதி திரைப்படம் லோகேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாடல்களே இல்லாமல் ஒரு படத்தை இந்த அளவுக்கு விறுவிறுப்பாக எடுக்க முடியுமா என பலரையும் வியப்பில் ஆழ்த்தினார் லோகேஷ். அதன்பின் அவரது கெரியர் அசுர வளர்ச்சி கண்டது, விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் லியோ, கமல்ஹாசனின் விக்ரம் என தொடர்ந்து 5 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துவிட்டார் லோகி.
Lokesh kanagaraj salary
மாநகரம் படத்துக்காக ரூ.5 லட்சம் சம்பளமாக வாங்கிய லோகேஷுக்கு கைதி படத்தை இயக்க அதைவிட 10 மடங்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டது. கைதி படத்தின் வெற்றிக்கு பின்னர் மாஸ்டர் படத்துக்காக முதலில் அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம். ஆனால் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் பின்னர் ரூ.3 கோடி அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து விக்ரம் படத்துக்காக முதலில் லோகேஷுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசி உள்ளனர். ஆனால் அப்படம் இண்ட்ஸ்ட்ரி ஹிட் ஆனதும் ரூ.15 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.
Lokesh kanagaraj net worth
இதையடுத்து அவர் இயக்கிய லியோ படத்துக்கு ரூ.25 முதல் 30 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட் ஆகியுள்ள லோகேஷுக்கு ரூ.45 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாம். இப்படி படத்துக்கு படம் அவரின் சம்பளம் உயர்வதை போல் சொத்து மதிப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இயக்குனர் லோகேஷுக்கு தற்போது 50 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாம். தலைவர் 171 படத்துக்கு பின்னர் அது 100 கோடியை தாண்டவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அனிருத் வீட்டு பூஜையில் அம்மாவோடு ஆஜரான அஜித் மகள் அனோஷ்கா - வைரலாகும் போட்டோஸ்