ஆல் தி பெஸ்ட்.. நல்லா பண்ணுங்க.. தலைவர் தந்த மோட்டிவேஷன்.. STR48 எந்த அளவில் உள்ளது - அப்டேட் சொன்ன தேசிங்கு!
Rajinikanth Wished Desingh Periyasamy : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பலரின் பாராட்டுகளை பெற்ற இயக்குனர் தான் தேசிங்கு பெரியசாமி.
Kannum Kannum Kollaidithal
கடலூரில் பிறந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் தேசிங்கு பெரியசாமி என்று கூறினால் அது இது அல்ல. பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் தான் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்", முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை களத்தை அமைத்து அதில் வெற்றி கண்ட தேசிங்கு பெரியசாமி தற்பொழுது பிரபல நடிகர் சிலம்பரசன் அவர்களை இயக்கி வருகிறார்.
பருத்திவீரன் டூ ஜப்பான்... 25 படங்களில் நடித்த நடிகர் கார்த்தி இத்தனை கோடி சொத்துகளுக்கு அதிபதியா?
Desingh Periyasamy
சிம்புவின் 48வது திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார், இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்திற்காக பிரத்தியேகமாக சில பயிற்சிகளை வெளிநாட்டிற்கு சென்று மேற்கொண்டு வருவதாகவும், இது ஒரு பீரியட் பிலிம் என்பதால் அதற்கான விசேஷ செட்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
STR 48
இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய தேசிங்கு பெரியசாமி அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்மையில் தனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு "ஆல் தி பெஸ்ட், நல்லா பண்ணுங்க, சூப்பரா பண்ணுங்க" என்று தனக்கு வாழ்த்து கூறியதாகவும். சிலம்பரசன் இந்த கதையில் தன்னிடம் எந்த மாற்றமும் கூறாமல், அவருடைய முழு உழைப்பையும் இந்த திரைப்படத்திற்காக அளித்து வருவதாகவும் தேசிங்கு தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்காக கடுமையான பல உடற்பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தேசிங்கு தெரிவித்தார். ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் முடிந்த பிறகு விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.