ராஜாதி ராஜா.. ஷூட்டிங் முடிந்ததும் நதியாவிற்கு சர்ப்ரைஸ் பார்ட்டி தந்த சூப்பர் ஸ்டார் - கிளாசிக் பிக்ஸ் வைரல்!
Super Star Surprise Nadhiya : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக பல ஆண்டுகளாக திகழ்ந்துவரும் ஒரு மாஸ் நடிகர் தான் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் துவங்கி இன்று ஜெய்லர் வரை பல நூறு ஹிட் திரைப்படங்களை கொடுத்த ஒரு மாபெரும் நடிகர் அவர்.
Rajathi Raja
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து நடித்த பல முன்னணி நடிகைகள் இன்று புகழின் உச்சியில் உள்ளனர் என்றே கூறலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்து இன்று மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் நடிகை தான் நதியா.
Super Star
மலையாள நடிகையான நதியா 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பூவே பூச்சூடவா" திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதன் பிறகு 1989ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "ராஜாதி ராஜா" என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
Vineeth
இந்நிலையில் அந்த திரைப்பட ஷூட்டிங் முடிந்த பிறகு திருமணம் செய்யவிருந்த நதியாவிற்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு சர்ப்ரைஸான பிரிவு உபசார விழாவை ஏற்பாடு செய்துள்ளார். அதில் அவருக்கு பூங்கொத்துகள் வழங்கி அந்த படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிய வருகிறது.