MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171.. வில்லனை வலைவீசி தேடும் இயக்குனர் - அந்த 3 நடிகர்கள் லிஸ்டில் உள்ளார்களாம்!

லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171.. வில்லனை வலைவீசி தேடும் இயக்குனர் - அந்த 3 நடிகர்கள் லிஸ்டில் உள்ளார்களாம்!

Thalaivar 171 Villain : தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் அடுத்தபடியாக லோகேஷ் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார்.

2 Min read
Author : Ansgar R
Published : Dec 02 2023, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தற்போது ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 170-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த படம் பணிகளை முடித்தவுடன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தனது 171வது திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்பொது அந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிராக வில்லனாக நடிக்க 3 டாப் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஒரு கையில் அருவா... இன்னொரு கையில் வெட்டப்பட்ட தலை! ரணகொடூரமாக இருக்கும் விஷால் 'ரத்னம்' பட ஃபர்ஸ்ட் லுக்!

24
SJ Suryha

SJ Suryha

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல டாப் நடிகர்களுக்கு எஸ்.ஜே சூர்யா அவர்கள் வில்லனாக நடித்து பல திரைப்படங்கள் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

34
Fahad Fazil

Fahad Fazil

அதேபோல அண்மையில் தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை அதிகமாக செலுத்தி வரும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த திரைப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

44
Arun vijay

Arun vijay

அதேபோல தல அஜித் அவர்களுக்கு வில்லனாக நடித்து, தனது தமிழ் திரையுலக வாழ்க்கையில் ஒரு ரீ-என்ட்ரி கொடுத்த நடிகர் தான் அருண் விஜய். தலைவர் 171 வில்லன் பட்டியலில் அவரும் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மிக நேர்த்தியாக கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருண் விஜய் தற்பொழுது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
அருண் விஜய்
லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved