ஒரு கையில் அருவா... இன்னொரு கையில் வெட்டப்பட்ட தலை! ரணகொடூரமாக இருக்கும் விஷால் 'ரத்னம்' பட ஃபர்ஸ்ட் லுக்!
இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடித்து வரும் 34-ஆவது படத்திற்கு ரத்னம் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில், ஏற்கனவே விஷால் நடித்த தாமிரபரணி, மற்றும் பூஜை ஆகிய படங்கள் அவருக்கு கை கொடுத்த நிலையில், மூன்றாவது முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் தன்னுடைய 34-ஆவது படத்திற்காக இணைந்துள்ளார்.
சமீபத்தில் தூத்துக்குடி வட்டாரத்தில் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் அடுத்தப்பட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். கடைசியாக தன்னுடைய மைத்துனர் அருண் விஜய்யை வைத்து இயக்குனர் ஹரி இயக்கிய 'யானை' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹரியுடன் 'ரத்னம்' படத்தில் கைகோர்த்துள்ளார்.
மேலும் யோகி பாபு, கெளதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஷால் கிராமத்து இளைஞர் வேடத்தில் நடிக்கிறார். இன்று இந்த படத்தின் டைட்டில் 'ரத்னம்' என்று வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் ஃபர்ஸ்ட் லுக்கில், விஷால்.. ரத்த கலரியில் ஒரு கையில் அருவா மற்றும் மற்றொரு கையில் மனிதனின் தலை என கொடூரமாக காட்சியளிக்கிறார். அவர் கட்டி இருக்கும் பட்டி பெல்ட்டில் பல கத்தி சொருகி வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரே படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.