சூப்பர் 8 சுற்றுக்காக அந்தரத்தில் தொங்கும் இலங்கை – எல்லா கதவும் குளோஸ் – வாய்ப்பு கொடுக்குமா நெதர்லாந்து?
இலங்கை மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
SL vs NEP, T20 World Cup 2024
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள் மற்றும் இலங்கை அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
SL vs NEP, T20 World Cup 2024
இதுவரையில் தென் ஆப்பிரிக்கா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வங்கதேசம் 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணியும் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
SL vs NEP, T20 World Cup 2024
நேபாள் விளையாடிய 2 போட்டியில் ஒரு தோல்வி, ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. கடைசியாக இலங்கை விளையாடிய 3 போட்டியில் 2 தோல்வி மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
SL vs NEP, T20 World Cup 2024
நேற்று இலங்கை மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான 23ஆவது போட்டி நடைபெற இருந்தது. இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், போட்டி நடைபெற இருந்த ஃபுளோரிடாவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் போட்டியானது கைவிடப்பட்டது.
SL vs NEP, T20 World Cup 2024
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 27ஆவது போட்டி மழையால் கைவிடப்பட வேண்டும். அதோடு, இலங்கை தனது கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இது நடந்தால் மட்டுமே இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
SL vs NEP, T20 World Cup 2024
இல்லையென்றால், இலங்கையின் டி20 உலகக் கோப்பை கனவு அவ்வளவு தான். இந்த தொடரில் இலங்கை இன்னும் ஒரு வெற்றி கூட பெறவில்லை. கடைசியாக நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 16 ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.