MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ethirneechal: எதிர்நீச்சலில் என்ட்ரி கொடுக்கும் 'கில்லி' பட நடிகை! TRP-யில் விட்ட இடத்தை பிடிக்க மாஸ் பிளான்!

Ethirneechal: எதிர்நீச்சலில் என்ட்ரி கொடுக்கும் 'கில்லி' பட நடிகை! TRP-யில் விட்ட இடத்தை பிடிக்க மாஸ் பிளான்!

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடரில், கில்லி படத்தில் நடித்த நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Dec 27 2023, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ethirneechal

ethirneechal

சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். கோலங்கள் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியல், ஆணாதிக்கம் நிறைந்த, சுயநல வாதியாக இருக்கும் குணசேகரன் என்கிற மனிதரை பற்றியும், அவருக்கு எதிராக பெண் உரிமைக்காக போராடும் ஜனனி என்கிற இரு கதாபாத்திரங்களை முதன்மையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.
 

26

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில், கனிகா, ஹரி ப்ரியா இசை, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் துவங்கிய ஒரு சில வாரங்களிலேயே டாப் 5 TRP லிஸ்டில் இடம்பிடித்த நிலையில், தொடர்ந்து... தொடர்ந்து டாப் 2 இடங்களை தக்க வைத்து கொண்டது.

Nayanthara: ஒயிட் அண்ட் பிளாக் உடையில்... உயிர் - உலகத்துடன் செலபிரேஷன் மோடில் நயன்! முத்த மழை பொழிந்த விக்கி!

36

இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகர் மாரி முத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாரடைப்பு காரணமாக இறந்த நிலையில்... சீரியல் TRP தொடர்ந்து சரிய துவங்கியது. 

46

தற்போது குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். தன்னுடைய ஸ்டைலில் அவர் குணசேகரன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்தாலும்... மாரி முத்துவின் அல்டிமேட் பர்ஃபாம்மென்ஸை மிஸ் பண்ணுவதாக கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

56

மேலும் TRP-யிலும் தற்போது 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது எதிர்நீச்சல் தொடர். எப்படியும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கதைக்களத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் திருச்செல்வம் தற்போது, ஜனனியின் சகோதரி வாசுவையும் களத்தில் இறக்கி பரபரக்க வைத்துள்ளார். அதே போல், மற்றொரு நடிகையும் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

66

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், கில்லி படத்தில் பிரகாஷ் ராஜின் அம்மாவாக நடித்த... பின்னணி பாடகியும், நடிகையுமான KT கலா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான 'ஐ' படத்தில் விக்ரமுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிபிடித்தக்கது. 

Sukanya Daughter Photo: அடேங்கப்பா... சும்மா ஹீரோயின் போல் இருக்கும் நடிகை சுகன்யாவின் மகள்! வைரலாகும் போட்டோ!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved