பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு சோலி முடிஞ்சது! இந்த வாரம் மட்டும் தியேட்டர் & OTTயில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?
பொங்கல் ரிலீஸ் படங்களின் ஆதிக்கம் காரணமாக கடந்த வாரம் தமிழில் புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் இந்த வாரம் 7 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
தியேட்டரில் ரிலீசாகும் படங்கள்
பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் அருண் விஜய் நடித்த மிஷன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இந்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதால், கடந்த வாரம் ஒரு புது தமிழ் படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், பொங்கல் ரிலீஸ் படங்கள் தற்போது தியேட்டரில் டல் அடிக்க தொடங்கி உள்ளதால் இந்த வாரம் ஏராளமான தமிழ் படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம்.
சிங்கப்பூர் சலூன்
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தை கோகுல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ், ஜீவா, அரவிந்த் சாமி ஆகியோர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 25-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது.
ப்ளூ ஸ்டார்
பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை ஜெய் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இதில் கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன், திவ்யா துரைசாமி, சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படமும் ஜனவரி 25-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... காலு மேல கால போடு இராவண குலமே... அரசியல் பேசி அதிரவிட்ட கீர்த்தி பாண்டியன் - மெர்சலான பா.இரஞ்சித்
சிறு பட்ஜெட் படங்கள்
இந்த வாரம் முடக்கறுத்தான், தநா, நியதி போன்ற சிறுபட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் முடக்கறுத்தான் திரைப்படம் ஜனவரி 25-ந் தேதியும், நியதி மற்றும் தநா ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 26-ந் தேதியும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர யோகிபாபு நடித்த தூக்குதுரை படமும் ஜனவரி 25-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
ஓடிடி ரிலீஸ் படங்கள்
ஓடிடியில் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம் தான் ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 27-ந் தேதி விஜயகுமார் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ஃபைட் கிளப் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் தமிழ் வெர்ஷன் ஜனவரி 26-ந் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான நேரு திரைப்படம் ஜனவரி 23-ந் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ள தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்தின் மகன்! குவியும் வாழ்த்து!