அமெரிக்காவில் பிஸினஸ் செய்யும் சுப்மன் கில் – விகஸ் வென்சர்ஸ் உடன் முதலீட்டாளராக இணைந்த கிரிக்கெட்டர்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் பிளேயராக இடம் பெற்றுள்ள சுப்மன் கில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விகஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடன் தொழில் முதலீட்டாளராக இணைந்துள்ளார்.
Shubman Gill Business
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 25ஆவது போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
Vicus Ventures
அமெரிக்கா விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் பிளேயராக இடம் பெற்றுள்ள கில் தற்போது அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளராக இணைந்துள்ளார்.
Shubman Gill Investor
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விகஸ் வென்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் முதலீட்டாளராக இணைந்துள்ளார். இதன் மூலமாக கிரிக்கெட் மட்டுமின்றி தொழில் முனைவோராக புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார். அவர் மட்டுமின்றி அவுலாக் மற்றும் சந்து ஆகியோரும் இந்த நிறுவனத்துடன் முதலீட்டாளர்களாக இணைந்துள்ளனர்.
Vicus Ventures
இது குறித்து அந்த நிறுவனம் இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் மற்றும் தொழில்நுட்பம் இரண்டிலும் இந்திய ஆதிக்கத்தைக் கொண்ட எங்களுடன் இணைந்த முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.