MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • புஷ்பா 2 உடன் மோதல் இல்லை.. இந்தியன் 2-வை சிங்கம் போல் சிங்கிளாக களமிறக்கும் ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

புஷ்பா 2 உடன் மோதல் இல்லை.. இந்தியன் 2-வை சிங்கம் போல் சிங்கிளாக களமிறக்கும் ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த அப்டேட் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2024, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Indian 2 Movie

Indian 2 Movie

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், சுகன்யாவும் நடித்திருந்தனர். மேலும் நடிகை கஸ்தூரி, நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்ததை போல் பட விழாக்களில் விருதுகளையும் வென்றது. இப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Kamalhaasan Indian 2

Kamalhaasan Indian 2

இத்தகைய சிறப்புமிக்க இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படம் கடந்த 2018-ம் ஆண்டே தொடங்கப்பட்டாலும், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் படத்தை கைவிடும் நிலைக்கே சென்ற நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை கையில் எடுத்தது. லைகா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட்டும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது.

இதையும் படியுங்கள்... களத்தூர் கண்ணம்மாவில் 500 ரூபாய்.. அதன் பின் விஸ்வரூபம் எடுத்த "ஆண்டவர்" - இந்தியன் 2வில் பெற்ற சம்பளம் என்ன?

35
Indian 2 Release Update

Indian 2 Release Update

பின்னர் பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படப்பிடிப்பை கடந்த 2022-ம் ஆண்டு மீண்டும் தொடங்கினர். தொடர்ந்து தைவான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, ஒரு கட்டத்தில் படத்தின் நீளம் கருதி, இப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்து அதற்கான படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளனர். இன்னும் பாடல் காட்சி மட்டும் எஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது.

45
Indian 2 eyeing for solo release

Indian 2 eyeing for solo release

ஷூட்டிங் ஒருபுறம் நடந்தால் மறுபுறம் பின்னணி பணிகளையும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வந்துள்ளார் ஷங்கர். இதனால் இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. முதலில் இப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடும் ஐடியாவில் இருந்த படக்குழு, புஷ்பா 2 படமும் அதே தேதியை லாக் செய்ததால், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கின்றனர்.

55
kamalhaasan, shankar

kamalhaasan, shankar

அதன்படி தற்போது வெளிவந்துள்ள தகவல்படி, இந்தியன் 2 திரைப்படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். பெரும்பாலும் இப்படம் சோலோவாக ரிலீஸ் ஆக அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பதால், தமிழ்நாட்டில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுவார்கள் என தெரிகிறது. இதனால் இந்தியன் 2 வசூல் வேட்டைக்கு ரெடியாகி விட்டது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்...  இந்தியன் 2, விடாமுயற்சி, தங்கலான் என 2024-ல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved