அப்போ இத்தாலி.. இப்போ ஸ்விட்சர்லாந்து.. ஐரோப்பாவை ஜாலியாக சுற்றி வரும் ஜனனி அசோக் குமார் - லேட்டஸ்ட் பிக்ஸ்!
Janani Ashok Kumar : பிரபல சின்னத்திரை நடிகை ஜனனி அசோக் குமார் தனது ஐரோப்பிய பயணத்தில் இத்தாலி நாட்டிற்கு சென்றுவிட்டு, அதன் பிறகு ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
Janani Ashok Kumar
இந்த காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு நிகராக, சீரியல் நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர் என்றால் அது சற்றும் மிகையல்ல. இதற்கு முக்கியமான காரணம் என்று பார்த்தால் அது சமூக வலை தளம் என்றே கூறலாம். அதில் புகைப்படங்களை பதிவிட்டு தங்களது ரசிகர்கள் வட்டத்தை நடிகை பெரிதாக்கி வருகின்றனர்.
கோவையில் இலவச இணையதள வசதியுடன் நூலகம் திறந்த விஜய் மக்கள் இயக்கத்தினர்... குவியும் பாராட்டு
Janani Ashok
அந்த வகையில் பிரபல நடிகை ரம்யா பாண்டியனை போல சமூக வலைத்தளம் மூலம் பிரபலமான ஒரு சின்னத்திரை நடிகை தான் ஜனனி அசோக் குமார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஜனனி, முதன்முதலில் நடித்தது "நண்பேண்டா" என்கிற திரைப்படத்தில் தான். இப்படத்தில் நயன்தாராவுடன் சிறிய கேரக்டரில் நடித்தார் ஜனனி.
Actress Janani Ashok Kumar
அதை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ஏமாளி என்கிற படத்திலும் அவர் நடித்தார். தொடர்ந்து சின்ன சின்ன கேரக்டரே கிடைத்து வந்ததால், இனி இது செட் ஆகாது என முடிவெடுத்து சின்னத்திரை சீரியலில் நடிக்கத் தொடங்கினார் ஜனனி அசோக் குமார்.
Serial Actress Janani Ashok Kumar
தற்போது செம்பருத்தி நாடகம் மூலம் புகழ்பெற்றுள்ள ஜனனி, பல முன்னணி கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றார். பிசியாக நடித்து வரும் அதே நேரத்தில், வெளிநாடுகளுக்கு சுற்றுலாவும் சென்று வருகின்றார் ஜனனி அசோக் குமார்.