MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கடவுளே.. நல்ல உடல்நலத்துடன் சீக்கிரம் வெளிய வரணும்.. பழைய நண்பருக்காக வருத்தப்பட்ட டிடிவி. தினகரன்!

கடவுளே.. நல்ல உடல்நலத்துடன் சீக்கிரம் வெளிய வரணும்.. பழைய நண்பருக்காக வருத்தப்பட்ட டிடிவி. தினகரன்!

 வன்னியர்களை ஏமாற்றியது போல இபிஎஸ் சிறுபான்மை மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சிறுபான்மையின மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. 

1 Min read
vinoth kumar
Published : Jan 10 2024, 06:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TTVDhinakaran

TTVDhinakaran

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமமுக தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கலந்துகொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அமமுக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முக்கியமான கூட்டணியில் அங்கம் வகிக்கும். நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக ஒரு அங்கமாக செயல்படும். 

24
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

சில கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து நாங்கள் தெரிவிப்போம். வன்னியர்களை ஏமாற்றியது போல இபிஎஸ் சிறுபான்மை மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சிறுபான்மையின மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. எடப்பாடி பழனிசாமி போடும் வேடமெல்லாம் சிறுபான்மையின மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  வரும் தேர்தலில் இபிஎஸ்க்கு சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பழனிசாமி ஏமாற்றுப் பேர்வழி என எல்லோருக்கும் தெரியும்.

34
Bus Strike

Bus Strike

தான் ஆட்சி பொறுப்புக்கு வர காரணமாக இருந்தவர்கள் முதுகிலேயே குத்தியவர் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியை தொடர உதவியாக இருந்தவர்கள் முதுகில் குத்தினார். அனைத்திற்கும் மேல் தங்களை பாதுகாத்தவர்களை முதுகில் குத்தும் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். கொடநாடு வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த விஷயத்தில் அதிகார திமிருடன் இருக்கக்கூடாது என்றார். 

44
Senthil Balaji

Senthil Balaji

செந்தில் பாலாஜி எனது  பழைய நண்பர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே எங்களுடன் பயணித்தவர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல செந்தில் பாலாஜிக்கு நடந்துள்ளது. சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது அவரை பார்த்தால் ஒரு நண்பராக தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நல்ல உடல்நலனோடு வெளியே வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை என்று டிடிவி. தினகரன்  தெரிவித்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
திமுக
எடப்பாடி பழனிசாமி
செந்தில் பாலாஜி
டிடிவி தினகரன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved