MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிரடியாக மாற்றிய நெட்பிளிக்ஸ்... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிரடியாக மாற்றிய நெட்பிளிக்ஸ்... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்த குஷி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 24 2023, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kushi

kushi

சமந்தா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த திரைப்படம் குஷி. ஷிவா நிர்வாணா இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்தது. தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். வெளியான முதல் வாரத்தில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் ஒரே வாரத்தில் ரூ.70 கோடி வசூலைப் வாரிக்குவித்தது. இதனால் ரூ.100 கோடி வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Kushi movie

Kushi movie

ஆனால் அப்படம் வெளியான அடுத்த வாரமே ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆகி தியேட்டர்களை ஆக்கிரமித்ததால், குஷி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மளமளவென சரித்தது. முதல் வாரம் ரூ.70 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் வாரத்தில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் தெலுங்கில் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஜவான் படத்தை பார்த்து மெர்சலாயிட்டாங்க... அதிரடியாக வந்த ஹாலிவுட் வாய்ப்பு குறித்து மனம்திறந்த அட்லீ

34
Kushi movie OTT release

Kushi movie OTT release

தெலுங்கில் குஷி படம் நஷ்டத்தை சந்தித்தாலும், தமிழ் நாட்டில் இப்படம் நன்கு வசூலித்தது. இப்படம் ரூ. 10 கோடி வரை தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்து நன்கு லாபத்தை கொடுத்துள்ளது. அதேபோல் இப்படத்தை வெளிநாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நன்கு லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி குஷி படம் தியேட்டரில் சொதப்பியதால் இப்படத்தை அக்டோபர் 6-ந் தேதி ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டது.

44
Kushi movie OTT release date

Kushi movie OTT release date

ஆனால் அந்த ரிலீஸ் தேதி தற்போது அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி குஷி திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதியே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அந்நிறுவனம் ரூ.30 கோடி கொடுத்து குஷி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... எத்தன கோடி கொடுத்தாலும் அந்த நடிகைக்கு ஜோடியா நடிக்கவே மாட்டேன்... விஜய் சேதுபதி முடிவுக்கு குவியும் பாராட்டு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு
விஜய் தேவரகொண்டா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved