ஜவான் படத்தை பார்த்து மெர்சலாயிட்டாங்க... அதிரடியாக வந்த ஹாலிவுட் வாய்ப்பு குறித்து மனம்திறந்த அட்லீ
ஜவான் படத்தை பார்த்த ஹாலிவுட் பிரபலங்கள் தன்னை அங்கு படம் இயக்க அழைத்ததாக இயக்குனர் அட்லீ பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Atlee, shankar
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இதையடுத்து ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த இவர், முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்து வெற்றி கண்டார். ராஜா ராணி படத்துக்கு பின்னர் அட்லீ கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் தெறி. விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ, அவருக்காக பார்த்து பார்த்து செதுக்கிய படமான தெறி, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
vijay, Atlee
ஒரே படத்தில் விஜய்யின் மனம் கவர்ந்த இயக்குனரான அட்லீக்கு, அடுத்தடுத்து தன்னுடைய மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விஜய். இதன்மூலம் விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீக்கு திடீரென பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதுவும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு படம் பண்ணும் வாய்ப்பு, சும்மா விடுவாரா அட்லீ, தன்னிடம் உள்ள மாஸ் ஸ்டோரி ஒன்றை சொல்லி ஷாருக்கானின் கால்ஷீட்டை கொத்தாக வாங்கிவிட்டார்.
இதையும் படியுங்கள்... எத்தன கோடி கொடுத்தாலும் அந்த நடிகைக்கு ஜோடியா நடிக்கவே மாட்டேன்... விஜய் சேதுபதி முடிவுக்கு குவியும் பாராட்டு
Shah Rukh khan, Atlee
சுமார் 350 கோடி பட்ஜெட்டில் தன்னுடைய தயாரிப்பிலேயே அப்படத்தை எடுக்க ஷாருக்கான் முன்வர, அட்லீ இது கனவா இல்லை நினைவா என்று தெரியாமல் திக்குமுக்காடி போனார். பின்னர் பாலிவுட்டில் முதல் படமே மாஸாக கொடுக்க வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இருந்த அட்லீ, எதிர்பார்த்தபடியே ஜவான் படத்தை செம்ம மாஸாக எடுத்து வெற்றியும் கண்டுவிட்டார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
jawan
இந்த நிலையில், ஜவான் படம் பார்த்த ஹாலிவுட் பிரபலங்கள் தன்னை அங்கு படம் பண்ண அழைத்ததாக கூறி உள்ளார். ஜவான் படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஸ்பைரோ என்பவர் தனது நண்பர்களுடன் ஜவான் படத்தை பார்த்தாராம். அப்போது ஜவான் படத்தில் ஷாருக்கான் டிரக் ஒன்றை சேஸிங் செய்யும் காட்சியை பார்த்து பிரம்மித்துப்போன அவர்கள், இது யாருடைய ஐடியா என கேட்டதும் அவர், அட்லீயை பற்றி கூறி இருக்கிறார்.
Atlee next movie
உடனே அட்லீக்கு ஹாலிவுட் படம் இயக்கும் அழைப்பும் வந்திருக்கிறது. இதனால் உற்சாகத்தில் திளைத்து போனாராம் அட்லீ. ஸ்டண்ட் இயக்குனர் ஸ்பைரோ, வெனாம், கேப்டன் அமெரிக்கா போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் ஆவார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் அழைப்பு வந்துள்ளதை பார்த்து முன்னணி இயக்குனர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... இவருக்கு 40 வயசுன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்... சிம்புவின் யங் லுக் போட்டோஸ் பார்த்து மெர்சலான ரசிகர்கள்