ரூ.3300 கோடி பிசினஸ்... தனி ஒருவனாக கட்டி காப்பாற்றும் அரவிந்த் சாமியின் வியக்க வைக்கும் NET WORTH இதோ
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், ரியல் லைஃபில் தொழிலதிபராகவும் ஜொலித்த நடிகர் அரவிந்த் சாமியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
aravind swamy
மணிரத்னம் இயக்கிய தளபதி என்கிற மாஸ்டர் பீஸ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வெறும் 20 வயது தான். முதல் படத்திலேயே ரஜினி, மம்முட்டி என இரு ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்துவிட்ட அரவிந்த் சாமியை தன்னுடைய அடுத்தபடத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார் மணிரத்னம். அரவிந்த் சாமி முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் ரோஜா. இப்படம் அவருக்கு சாக்லேட் பாய் அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது.
aravind swamy Business
அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என அந்த காலத்து பெண்கள் சொல்லும் அளவுக்கு இளம்பெண்கள் மனதில் காதல் மன்னனாகவே வலம் வந்தார் அரவிந்த் சாமி. இதையடுத்து தாலாட்டு, பாசமலர்கள் போன்ற படங்களில் நடித்த அவருக்கு பாம்பே மூலம் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார் மணிரத்னம். பின்னர் மின்சார கனவு, என் சுவாச காற்றே என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த அரவிந்த் சாமி சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
aravind swamy salary
கடந்த 2000-ம் ஆண்டு சினிமாவை விட்டு விலகிய அரவிந்த் சாமி தன் தந்தை வி.டி.சுவாமி அண்ட் கம்பெனியை நிர்வகிக்க தொடங்கினார். பிசினஸ் பிக் அப் ஆன பின்னர் 2005-ம் ஆண்டு சுவாமி டேலண்ட் மேக்சிமஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கினார் அரவிந்த் சாமி. அந்நிறுவனம் தொடங்கிய சில மாதங்களிலேயே அவர் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அப்போது மேற்கொண்ட சிகிச்சையின் போது அவரது காலின் ஒரு பகுதி செயலிழந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
aravind swamy Net worth
இதனால் படுத்த படுக்கையாக இருந்த அரவிந்த் சாமி, உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். பின்னர் படிப்படியாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அரவிந்த் சாமி, 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படம் தான். அப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்கிற ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
aravind swamy as MGR
கடந்த 2021-ம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆக நடித்திருந்தார். குறிப்பாக அப்படத்தில் இவர் அச்சு அசல் எம்.ஜி.ஆர் போலவே வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு அவரது நடிப்பும் கெட்டப்பும் எம்.ஜி.ஆரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. இப்படத்திற்காக அவருக்கு ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.
Aravind swamy growth
சினிமாவை காட்டிலும் பிசினஸில் தான் கோடிகோடியாய் சம்பாதித்து வருகிறார் அரவிந்த் சாமி. இதனால் பிசினஸில் தான் இவர் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நிலவரப்படி இவரின் டேலண்ட் மேக்சிமஸ் நிறுவனத்தின் வருமானம் 412 மில்லியன் டாலர்களாம். இந்திய மதிப்பில் ரூ.3300 கோடியாகும். இதுதவிர சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள பங்களாக்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் அரவிந்த் சாமி.
இதையும் படியுங்கள்... அக்ரீமெண்ட்டில் கையெழுத்திட்ட ரூபஸ்ரீ.. கார்த்தியின் மாஸ்டர் பிளானில் சிக்கியது யார்? கார்த்திகை தீபம் சீரியல்