MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை... கேஜிஎப் நாயகன் யாஷின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு இதோ

ஒரே படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை... கேஜிஎப் நாயகன் யாஷின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு இதோ

கே.ஜி.எப் நாயகன் யாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 08 2024, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Yash

Yash

கர்நாடகாவில் உள்ள பூவனஹல்லி என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் நடிகர் யாஷ். இவரது இயற்பெயர் நவீன் குமார் கவுடா. பின்னர் நாடகங்களில் நடிக்க தொடங்கியதும் தன் பெயரை யாஷ் என மாற்றிக்கொண்டார். பின்னர் போகப்போக அந்த பெயரே அவரது அடையாளமாகவும் மாறியது. நாடக கலைஞராக மேடை நாடகங்களில் நடித்துவந்த யாஷுக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்று கன்னட சீரியல்களில் நடிக்க தொடங்கிய யாஷ், கடந்த 2008-ம் ஆண்டு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
KGF hero Yash

KGF hero Yash

கன்னடத்தில் அவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் ராக்கி. அப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பிற மொழி படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிப்பதில் கவனம் செலுத்தினார் யாஷ். குறிப்பாக தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான விமலின் களவாணி, சசிகுமாரின் சுந்தரபாண்டியன் போன்ற படங்களை கன்னட மொழியில் ரீமேக் செய்து நடித்தார் யாஷ். தமிழைப்போல் அப்படங்களுக்கு கன்னடத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

36
Toxic movie hero Yash

Toxic movie hero Yash

இதன்பின்னர் சினிமாவில் வெற்றி, தோல்வி என ஏற்ற இறக்கங்களுடன் கொண்டிருந்த யாஷின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கே.ஜி.எஃப் தான். கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. கன்னட படம் என்பதால் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த சினிமா ரசிகர்கள், பின்னர் அப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வருவதை பார்த்து படிப்படியாக கொண்டாட தொடங்கினர். இப்படம் பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... தொழிலதிபருடன் ரகசிய திருமணம்... அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாரா அஞ்சலி? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்

46
Yash Birthday

Yash Birthday

இதன் பின்னர் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு, முதல் பாகத்தைவிட டபுள் மடங்கு பிரம்மாண்டமாக அப்படத்தை எடுத்து கடந்த 2022ம் ஆண்டு ரிலீஸ் செய்தது. படமும் எதிர்பார்த்த படியே பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி மாஸ் காட்டியது. தமிழ்நாட்டில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகி கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்ததோடு உலகளவில் ரூ.1100 கோடிக்கு மேல் கலெக்‌ஷனையும் அள்ளியது.

56
Yash salary

Yash salary

கே.ஜி.எப் படத்தின் முதல் பாகத்திற்காக யாஷுக்கு வெறும் ரூ.4 கோடி சம்பளம் பேசப்பட்டு இருந்து. ஆனால் ரிலீசுக்கு பின்னர் அப்படம் அதிரிபுதிரியான வெற்றியை பெற்றதால் அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. அதேபோல் 2ம் பாகத்துக்கு டபுள் மடங்கு சம்பளத்தை கூட்டிய யாஷ் ரூ.30 கோடி சம்பளத்தோடு, அப்படத்தின் ஷேரிலும் குறிப்பிட்ட தொகையை வாங்கி இருந்தார். அடுத்ததாக டாக்சிக் என்கிற திரைப்படத்தில் நடிக்க உள்ள யாஷ் அப்படத்திற்காக ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

66
Yash Net Worth

Yash Net Worth

இப்படி கே.ஜி.எப்பில் ராக்கி பாய் என்கிற டான் ஆக மிரட்டி புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் யாஷ் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகிறது. இப்படி ஒரே படத்தின் மூலம் ஓஹோனு வாழ்ந்து வரும் நடிகர் யாஷுக்கு ரூ.53 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்கு பின்னர் பெங்களூருவில் ரூ.4 கோடி மதிப்பில் சொகுசு பங்களா ஒன்றை சொந்தமாக வாங்கி இருந்தார். அதுமட்டுமின்றி யாஷிடம் ஆடி, பென்ஸ், ரேஞ்ச் ரோவர்  போன்ற சொகுசு கார்களும் உள்ளன. 

இதையும் படியுங்கள்... காஞ்சிபுரம் கோவிலில் டெஸ்ட் பட ஷூட்டிங்... நயன்தாராவை காண அலைமோதிய மக்கள் கூட்டம் - வைரலாகும் வீடியோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved